World Badminton Rankings: 13வது இடத்தை பிடித்த இந்திய வீரர் – ரசிகர்கள் பாராட்டு மழை!

0
World Badminton Rankings: 13வது இடத்தை பிடித்த இந்திய வீரர் - ரசிகர்கள் பாராட்டு மழை!
World Badminton Rankings: 13வது இடத்தை பிடித்த இந்திய வீரர் - ரசிகர்கள் பாராட்டு மழை!
World Badminton Rankings: 13வது இடத்தை பிடித்த இந்திய வீரர் – ரசிகர்கள் பாராட்டு மழை!

இந்திய ஓபனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் லக்‌ஷயா சென் உலக அளவிலான சிறந்த பேட்மிண்டன் வீரர்களுக்கான தரவரிசையில் 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனால் லக்‌ஷயா சென்னுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பேட்மிண்டன் தரவரிசை:

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு பேட்மிண்டன் வீரர்களின் சர்வதேச தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் முதல் 10 இடத்தில் கடந்த ஆண்டு போல இரண்டு இந்திய வீரர்கள் நீடிக்கின்றனர். பி.வி.சிந்து 7வது இடத்திலும் மற்றும் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் முறையே இடத்திலும் 10 வது இடத்திலும் நீடித்து வருகின்றனர். இதை தொடர்ந்து இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென் 17வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

தமிழக பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய ஓபன் தொடரில் லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் உலக அளவிலான பேட்மிண்டன் வீரர்களின் சர்வதேச தரவரிசை பட்டியலில் 13 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா ஓபனில் பட்டம் வென்ற சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகிய இருவரும் 10வது இடத்தில் உள்ளனர். தற்போது வெளியிட்ட சர்வதேச தரவரிசையில் 8 வது இடத்தை பிடித்துள்ளார்கள்.

ஜனவரி 27 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு? மாநகராட்சி நிர்வாகம் முடிவு!

இதனை தொடர்ந்து இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பி.சாய் பிரனீத்தும் 18வது இடத்தில் நீடிக்கிறார். தற்போது சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் லக்‌ஷயா சென் 13வது இடத்திற்கு முன்னேறியது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. பேட்மிண்டன் தரவரிசையில் முன்னேறியது தனக்கு மகிழ்ச்சியளித்துள்ளதாக செய்தியாளர்களை சந்தித்த லக்‌ஷயா சென் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!