அக்.1 முதல் ஊழியர்களின் வேலை நேரம், ஊதியம் மாற்றம் – புதிய தொழிலாளர் குறியீடு அமல்!

0
அக்.1 முதல் ஊழியர்களின் வேலை நேரம், ஊதியம் மாற்றம் - புதிய தொழிலாளர் குறியீடு அமல்!
அக்.1 முதல் ஊழியர்களின் வேலை நேரம், ஊதியம் மாற்றம் - புதிய தொழிலாளர் குறியீடு அமல்!
அக்.1 முதல் ஊழியர்களின் வேலை நேரம், ஊதியம் மாற்றம் – புதிய தொழிலாளர் குறியீடு அமல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் தொழிலாளர் சட்ட விதிகளில் மாற்றங்களை அறிவித்தது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொழிலாளர் விதி:

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் பொதுவான தொழிலாளர் விதிகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த விதிகளின் கீழ் தான் ஒவ்வொரு ஊழியரின் சம்பள விவரம், வேலை நேரம் ஆகியவை கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் தொழிலாளர் விதிகளை மாற்றியமைத்த மத்திய அரசு கடந்த மாதங்களில் புதிய விதிகளை அறிவித்தது. இந்த புதிய தொழிலாளர் சட்டத்தில் பணியாளர்களின் வேலை நேரம் 9 மணி முதல் 12 மணி நேரமாக அதிகரிக்கப் போகிறது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – தூய்மை பணிகள் தீவிரம்!

அதே நேரத்தில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு ஊதியமும் மாறும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வரைவு விதியின் படி, ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் மொத்த சம்பளத்தில் 50% அல்லது அதற்கு மேல் உயர வாய்ப்புள்ளது. அதனால் பெரும்பாலான ஊழியர்களின் சம்பள அமைப்பு மாற்றமடைய உள்ளது. இதேபோல், மொத்த சம்பளத்தில் உள்ள மற்ற கொடுப்பனவுகளும் மாறும், அதாவது அதிகமாகும். இதனிடையே ஊழியர்களின் ஊதியத்தை அடிப்படையாக கொண்ட அடிப்படை சம்பள உயர்வு PF ஐ மேலும் அதிகரிக்கும். இதனால் நிறுவனங்களின் செலவும் அதிகரிக்கும்.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் பணக்கொடை மற்றும் PF பங்களிப்பு அதிகரிப்பதால், ஓய்வூதியத் தொகையும் அதிகரிக்கும். இதன் மூலம் அதிக ஊதியம் பெறும் அதிகாரிகள் தங்கள் ஊதிய அமைப்பில் அதிக மாற்றத்தை பெறுவார்கள். குறிப்பாக புதிய வரைவு சட்டம் ஊழியர்களின் வேலை நேரத்தை அதிகப்படுத்துகிறது. அதாவது வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட உள்ளது. OSCH குறியீட்டின் வரைவு விதிகள், OT நேரங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் அதிகமாக இருந்தால் கணக்கிடப்படுகிறது. மேலும் எந்தவொரு பணியாளரும் 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வேலை செய்வதை தடை செய்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் இடையில் அரை மணி நேர ஓய்வு வழங்க வேண்டும் என விளக்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!