தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு – வேலை நாட்கள் அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு - வேலை நாட்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு - வேலை நாட்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு – வேலை நாட்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளிகளில் 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில் பள்ளி ஆசிரியர்களுக்கு 210 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேலை நாட்கள்:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 2021 – 2022 ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு அதன்படி தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது 10,11,12ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கடந்த 14ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே போல 11ம் வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு – அரசாணை வெளியீடு!

இந்த நிலையில் வரும் 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான செயல்பாடுகளையும் கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. இது குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், இனி வரும் கல்வியாண்டில் கொரோனா கால அட்டவணை இல்லாமல் வழக்கம் போல வகுப்புகள் நடத்தப்படும். மேலும் புதிய திட்டமாக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள பள்ளிகளில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து 2022 – 2023 ம் ஆண்டுக்கான பள்ளி மாத நாள்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அரசு விடுமுறை, வார விடுமுறை ஆகியவற்றை சேர்த்து, 148 நாட்கள் விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 7 நாட்கள் இதர பணி நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் அடுத்த கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது இதில் பள்ளி வேலை நாட்களை மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளது. தற்போது வரும் கல்வியாண்டில் பள்ளி ஆசிரியர்களுக்கு 210 நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு விடுமுறை, வார விடுமுறை ஆகியவற்றை சேர்த்து, 148 நாட்கள் விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 7 நாட்கள் இதர பணி நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!