TCS நிறுவன ஊழியர்களுக்கு முடிவுக்கு வரும் WORK FROM HOME – புதிய திட்டம்!

0
TCS நிறுவன ஊழியர்களுக்கு முடிவுக்கு வரும் WORK FROM HOME - புதிய திட்டம்!
TCS நிறுவன ஊழியர்களுக்கு முடிவுக்கு வரும் WORK FROM HOME - புதிய திட்டம்!
TCS நிறுவன ஊழியர்களுக்கு முடிவுக்கு வரும் WORK FROM HOME – புதிய திட்டம்!

கொரோனா தொற்று பரவல் அச்சம் குறைந்து இயல்பு நிலை மீண்டும் திரும்பியுள்ளதால் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

TCS அறிவிப்பு:

கொரோனா தொற்று பாதிப்பினை அதிக தடுப்பூசிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாக குறைத்து தற்போது நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு அனைத்து துறை பணிகளும் சீராக வழக்கமான முறையில் செயலாற்ற தொடங்கி விட்டது. தகவல் தொழில்நுட்பத் துறையும், அதன் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்க கடந்த சில வாரங்களாக ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது வருமானத்தின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

Wipro நிறுவனத்தில் 17,000 பேருக்கு வேலைவாய்ப்பு – TCS, Infosys & HCL Tech திட்டங்கள்!

வரும் திங்கட்கிழமையான நவம்பர் 15ம் தேதி முதல் டிசிஎஸ் ஊழியர்களை அவர்களது அலுவலகத்திற்கு மீண்டும் வர கேட்டுக் கொண்டுள்ளது. உலகம் முழுவதிலும் இந்தியாவுடன் சேர்த்து TCS 5,28,748 பணியாளர்களை கொண்டுள்ளது. இதில் 5 சதவீத ஊழியர்கள் தற்போது அலுவலகங்களில் இருந்து பணிபுரிகின்றனர் என நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசிஎஸ் நிர்வாக துணைத் தலைவரும், மனித வளத்துறையின் உலகளாவிய தலைவருமான மிலிந்த் லக்காட்டின் தகவல் தொடர்பு மூலம் மற்றவர்களை திரும்ப அழைத்து வர முடிவு செய்யப்பட்டது என்று அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், “70 சதவீத டிசிஎஸ் ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதால் படிப்படியாக எங்கள் பணியாளர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளோம் இன்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற மற்ற தகவல் தொழிநுட்ப நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைக்க திட்டமிட்டுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் ஊழியர்கள் மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்தும், மீதமுள்ள நாட்கள் வீட்டிலிருந்தும் வேலை செய்யும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளிகளின் 3.5 லட்ச ஆசிரியர்களுக்கு 15% ஊதிய உயர்வு – அறிவிப்பு வெளியீடு!

நாஸ்காமின் அறிக்கையின்படி, குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள நிறுவனங்கள், வாரத்தில் ஐந்து நாட்களுக்குப் பதிலாக, வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு ஊழியர்களை திரும்பக் கொண்டு வருவதில் அதிக முனைப்பாக உள்ளதாகவும், 25 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள் நவம்பர் மாதத்திற்குள் தங்கள் அலுவலகங்களுக்குத் திரும்ப அழைக்கப்படுவார்கள் என்றும், அதே நேரத்தில் வயதின் அடிப்படையில் அடுத்த குழு தரப்படுத்தப்பட்ட முறையில் அழைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!