TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வீட்டில் இருந்தே வேலை!

0
TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - வீட்டில் இருந்தே வேலை!
TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - வீட்டில் இருந்தே வேலை!
TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வீட்டில் இருந்தே வேலை!

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான TCSன் ஊழியர்கள் நவம்பர் 15ம் தேதி முதல் அலுவகம் வரவழைக்கப்பட்ட போதிலும் இன்னும் 95% பேர் வீட்டிலிருந்து பணி செய்வதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

WFH முறை

நாடு முழுவதும் கொரோனா 2ம் அலைத்தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில் WFH முறையை பின்பற்றி வந்த சில முன்னணி தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலம் வரவழைக்க திட்டமிட்டு வந்தன. அந்த வகையில் TCS, விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அலுவலகம் வரவைக்க ஆலோசித்து வந்தது. அதன் படி TCS நிறுவனம், நவம்பர் 15 ஆம் தேதிக்குள் தங்களது ஊழியர்களை அந்தந்த அலுவலகங்களுக்கு திரும்பும்படி கேட்டுகொண்டது.

தமிழகத்தில் நவ.30 முதல் மழை படிப்படியாக குறையும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஆனால் தற்போது 95% TCS நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது 25% ஊழியர்கள் மட்டுமே TCS அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் 2022ம் ஆண்டு வரை 75% தொழில்நுட்ப வல்லுநர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை தொடர்வார்கள் என்றும் இந்நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

இது தொடர்பாக TCS மனித வளத்துறையின் உலகளாவிய தலைவர் மிலிந்த் லக்காட் கூறுகையில், தங்களது நிறுவனம் 100 சதவீத உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்க 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களில் இருப்பதை உறுதி செய்வதற்காக விஷன் 25/25 என்ற திட்டத்தை உருவாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஹைப்ரிட் ஒர்க் மாடலில், ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து சில நாட்களும் வீட்டில் இருந்து சில நாட்களும் வேலை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!