தமிழகத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பணி ஓய்வு பெற இருக்கும் ஆசிரியர்களுக்கு இந்த கல்வியாண்டு முழுக்க பணி நீட்டிப்பு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி நீட்டிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மட்டுமே கிட்டதட்ட 10,331 இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. எப்போதும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் அடிப்படையில் தான் இந்த காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படுகின்றன. ஆனால், பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாக பணியிடங்களை நிரப்பவும் கால தாமதமாகும் என்பதால் தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களில் சிலர் பணி ஓய்வு பெற இருக்கின்றனர். ஏற்கனவே பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கின்றனர். இந்த சமயத்தில் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்று கிளம்பிவிட்டால் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். இதனால், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இந்த கல்வியாண்டின் இறுதி வரைக்கும் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசில் அலுவலக உதவியாளர் வேலை – ICSI நிறுவனத்தில் Online விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்நிலையில், அரசு இந்த கோரிக்கையை ஏற்று ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இந்த கல்வியாண்டின் இறுதி வரைக்கும் மறு நியமன அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பணி நீட்டிப்பு வழங்கப்படும் ஆசிரியர்களின் பண்பு மற்றும் நடத்தைகள் மாணவர்களுக்கு திருப்திகரமாக இருக்க வேண்டும் எனவும், தொடர்ந்து இந்த கல்வியாண்டு முழுக்க பணிபுரியும் வகையில் ஆசிரியர்கள் உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!