மத்திய பாதுகாப்பு படையில் நிரந்தர கமிஷனுக்கு பெண்கள் நியமனம் – மத்திய அரசு அறிவிப்பு!

0
மத்திய பாதுகாப்பு படையில் நிரந்தர கமிஷனுக்கு பெண்கள் நியமனம் - மத்திய அரசு அறிவிப்பு!
மத்திய பாதுகாப்பு படையில் நிரந்தர கமிஷனுக்கு பெண்கள் நியமனம் - மத்திய அரசு அறிவிப்பு!
மத்திய பாதுகாப்பு படையில் நிரந்தர கமிஷனுக்கு பெண்கள் நியமனம் – மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய பாதுகாப்பு படையில் பெண்களை நிரந்தர கமிஷனுக்கு நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அதற்காக கால அவகாசம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

பெண்கள் நியமனம்:

மத்திய அரசு நாட்டில் மூன்று முக்கிய தேசிய பாதுகாப்பு துறையினை கொண்டுள்ளது. மற்ற இரண்டு துறைகளிலும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு படையில் மட்டும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் பாலின பாகுபாடு பார்க்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்றும், இது குறித்து மத்திய அரசு தனது முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.176 அதிரடி சரிவு – மாலை நிலவரம்!

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு மூலம் பாதுகாப்பு படையின் நிரந்தர கமிஷனுக்கு பெண்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாதுகாப்புப் படை குறித்த முடிவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான நிரந்தர கமிஷனுக்கு பெண்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.

ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டால் இழப்பீட்டு தொகை – உச்ச நீதிமன்றம் அதிரடி!

மத்திய அரசின் பாதுகாப்பு படை விவகாரம் தொடர்பான முடிவு குறித்து உச்சநீதிமன்றம் வரவேற்பதாக நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்துள்ளார். இதனால் மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் கால அவகாசத்தை வழங்கியுள்ளது. மேலும், இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 22ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவினால் இனி நாட்டின் பாதுகாப்பு படையில் பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!