ஆப்கானில் பெண்கள் பல்கலைக்கழகங்கள் சென்று கல்வி கற்க அனுமதி – தலிபான்கள் அறிக்கை தகவல்!

0
ஆப்கானில் பெண்கள் பல்கலைக்கழகங்கள் சென்று கல்வி கற்க அனுமதி - தலிபான்கள் அறிக்கை தகவல்!
ஆப்கானில் பெண்கள் பல்கலைக்கழகங்கள் சென்று கல்வி கற்க அனுமதி - தலிபான்கள் அறிக்கை தகவல்!
ஆப்கானில் பெண்கள் பல்கலைக்கழகங்கள் சென்று கல்வி கற்க அனுமதி – தலிபான்கள் அறிக்கை தகவல்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது ஆட்சியை பிடித்திருக்கும் தலிபான்கள், கல்வி கற்கும் உரிமையை பெண்களுக்கும் அளிப்பதாக அறிவித்துள்ளது. இருந்தாலும் ஆண்கள், பெண்களுக்கு இடையேயான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி உரிமம்

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் இஸ்லாமிய மதத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தன்வசமாக்கிய தலிபான்கள், முதல் நடவடிக்கையாக சாலைகளில் அமைந்துள்ள சலூன் கடைகளில் வரையப்பட்டிருந்த பெண்களின் புகைப்படங்களை வெள்ளை நிற வண்ணம் கொண்டு அளித்தனர். இதை கண்ட உலக நாடுகள், ஆப்கானிஸ்தான் பெண்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வருத்தம் தெரிவித்திருந்தது.

SpaceX ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஐஸ்கிரீம், எறும்புகள் & ரோபோட்!

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்கள் இனி கல்லூரிகளுக்கு சென்று கல்வி கற்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ‘ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய வளர்ச்சியின் கீழ், பெண்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும் ஆண்களும் பெண்களும் ஒரே வகுப்புகளில் கலந்து கொள்ள கடுமையான தடை இருக்கும். ஆப்கானிஸ்தான் மக்கள் ஷரியா சட்டத்தின் படி ஆண், பெண் கலப்பில்லாமல் பாதுகாப்பாக உயர்கல்வியைத் தொடர்வார்கள்’ என்று தலிபானின் உயர் கல்வி அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆப்கானிஸ்தானை முழுமையான இஸ்லாமியர்களின் நாடாக மாற்றவும், இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் பெண்களுக்கான அனைத்து உரிமைகளை அனுமதிப்பதாகவும் தாலிபான்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் கல்வித்துறையில் இஸ்லாமிய பாடத்திட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ள அவர்கள், இஸ்லாமியர்களின் தேசிய மற்றும் வரலாற்று மதிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என தகவல்கள் கூறுகிறது.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில் தலிபான்களின் கடந்த ஆட்சி காலத்தில் பெண்களின் மீதான அவர்களின் அடக்குமுறை மிகவும் கொடூரமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். அப்போது இருந்த பெண்களுக்கு கல்வி, உரிமை, சுதந்திரம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் மறுக்கப்பட்டது. மேலும் பெண்களது வாழ்க்கையில் எந்தவிதமான பொழுதுபோக்குகளுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. அதே நேரம் தலிபான்களின் விதிகளை மீறும் எவருக்கும் கடுமையான தண்டனையாக, கல்லால் அடித்து கொலை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!