தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை – தொழிலாளர் துறை அறிவுறுத்தல்!!

0
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை - தொழிலாளர் துறை அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை - தொழிலாளர் துறை அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை – தொழிலாளர் துறை அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு நடக்க உள்ள நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க தொழிலாளர் துறை அறிவுறுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் :

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். நடப்பு ஆண்டில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் ஈடுபட இருக்கும் பணியாளர்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கான பயிற்சிகளை அளித்து வருகிறது.

பொறியியல் செமஸ்டர் தேர்வுகளுக்கான வழிமுறைகள் – அண்ணா பல்கலை வெளியீடு!!!

விடுமுறை:

தேர்தல் நாளன்று பணியாளர்களுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முன்னதாக அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தொழிலாளர் துறை மதுரை மண்டல இணை ஆணையர் பெ.சுப்ரமணியன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போக்குவரத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், பள்ளிகள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள், கடைகள், அனைத்து வகை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6ம் தேதி ஊதியத்துடன் அளிக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

அமைப்புசாரா தொழில்களில் உள்ள பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். விடுப்பு நாளுக்கான ஊதியம், சாதாரண தொழிலாளிகளுக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்படும் ஊதியமாக வழங்க வேண்டும்.

வாக்குப்பதிவு நாளன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்க மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்ட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து மதுரை – 98652-54003, விருதுநகர் – 94425 24255, சிவகங்கை – 94424 18361, ராமநாதபுரம் – 94422 29502 போன்ற தொலைபேசி எண்ணில் புகார்களை தெரிவிக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!