WIPRO நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி & விண்ணப்ப விவரங்கள் இதோ!

0
WIPRO நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - தகுதி & விண்ணப்ப விவரங்கள் இதோ!
WIPRO நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - தகுதி & விண்ணப்ப விவரங்கள் இதோ!
WIPRO நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி & விண்ணப்ப விவரங்கள் இதோ!

இந்தியாவில் உள்ள இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ, தனது அலுவலகத்தில் காலியாக இருக்கும் கணக்கு நிர்வாகி மற்றும் நிதிச் சேவை பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை புதிய பட்டதாரிகளிடம் இருந்து வரவேற்றுள்ளது.

வேலை வாய்ப்பு

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ, தொழில்நுட்ப துறையில் வேலைக்காக காத்திருக்கும் நபர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது விப்ரோ நிறுவனத்தில் காலியாக இருக்கும் கணக்கு நிர்வாகி மற்றும் நிதி சேவைகள் பிரிவில் தற்போது புதிய ஆட்சேர்ப்புகளை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் வாடிக்கையாளர் தொடர்பான கடமைகளைச் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் தொடர்புடைய அறிவிப்பில் விப்ரோ குறிப்பிட்டுள்ளது. இந்த வேலைக்கான இடம், விண்ணப்ப செயல்முறைகள் ஆகியவற்றை இப்போது விரிவாக பார்க்கலாம்.

பதவி: கணக்கு நிர்வாகி

பணியிடம்: ஹைதராபாத்

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: வெளியிடப்படவில்லை.

பதிவு செய்யும் முறை: முதலில் விப்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careers.wipro.com/opportunities/jobs/2617212?lang=en-us&previousLocale=en-US இணைப்பை திறக்கவும்.

பின்னர் விண்ணப்பிக்கவும் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

அதில், புதிய இணையப் பக்கம் திறக்கும்.

இப்போது, மெயில் ஐடி மூலம் பதிவு செய்து, விண்ணப்பத்தை தவறு இல்லாமல் நிரப்பவும்.

குறிப்பாக, வழிமுறைகளை முழுமையாக படித்து விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.

இதற்கிடையில், முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ, குடும்ப சூழ்நிலை காரணமாக தொழில் இடைவெளியை எடுத்துக் கொண்ட பெண்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது. அவர்களுக்காக, ‘மீண்டும் தொடங்கு’ என்ற நிகழ்வை துவங்கியுள்ள விப்ரோ, சேர்த்தல் மற்றும் பன்முகத்தன்மை முன்முயற்சி திட்டத்தின் கீழ் தொழில் இடைவெளியுடன் கூடிய பெண் வல்லுநர்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட கால இடைவெளியில் ஓய்வு எடுத்த பெண்கள் மட்டுமே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விப்ரோ நிறுவனம் ‘மீண்டும் தொடங்கு’ திட்டம் குறித்து வெளியிட்ட ட்வீட்டில், ‘Begin Again என்பது பெண்களுக்காக நாங்கள் தொடங்கியுள்ள முதல் உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மை (I&D) கொண்ட திட்டமாகும். தொழில் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் பெண்களுக்காக இது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் ஓய்வு, தாய்மை, முதியோர் பராமரிப்பு, பயணம், பொழுதுபோக்குகள் அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணங்களால் தொழில்களை இழந்த பெண்களுக்கு வாய்ப்புகளை மேம்படுத்த இவை உதவும். புதிய தொழிலைத் தொடங்க இது அவர்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!