Wipro நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – பதவி, சம்பளம், தகுதி, விண்ணப்ப முறை விளக்கம்!

0
Wipro நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் - பதவி, சம்பளம், தகுதி, விண்ணப்ப முறை விளக்கம்!
Wipro நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் - பதவி, சம்பளம், தகுதி, விண்ணப்ப முறை விளக்கம்!
Wipro நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – பதவி, சம்பளம், தகுதி, விண்ணப்ப முறை விளக்கம்!

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவில் மூத்த மென்பொருள் பொறியாளர், கட்டிடக் கலைஞர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் பணிக்கான சம்பளம், தகுதி, விண்ணப்ப முறை விளக்கங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புகள்

முன்பெல்லாம் மென்பொருள் மற்றும் IT துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் என்பது பலருக்கும் எட்டாக்கனியாக இருந்து வந்தது. ஏனென்றால் இந்திய IT உலகின் மகுடமாக திகழும் TCS, விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தில் திறன் கொண்டவர்கள், பணி அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகளை வழங்கியது. இதனால் பல இளைஞர்களது IT கனவு, வெறும் கனவாகவே இருந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி இருக்கிறது.

தமிழகத்தில் எந்தெந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 – தெளிவுபடுத்த கோரிக்கை!

எடுத்த இடங்களில் எல்லாம் புதிய புதிய மென்பொருள் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. வேலைவாய்ப்புகளும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதிலும் TCS, விப்ரோ, இன்போசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் அனுபவம் இல்லாத புதிய பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்த நிதியாண்டில் மட்டும் IT நிறுவனங்களில் 400% வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இந்தியாவின் முன்னணி தொழிநுட்ப நிறுவனமான விப்ரோ மூத்த மென்பொருள் பொறியாளர்கள், கிளவுட் ஒருங்கிணைப்பு ஆலோசகர், கூகிள் கிளவுட் அட்மின் பணிக்கு ஆட்சேர்ப்பு நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. விப்ரோ ஒரு முன்னணி உலகளாவிய தகவல் தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் வணிக செயல்முறை சேவை நிறுவனமாகும். இந்நிறுவனம் அறிவாற்றல் கணினி, ஹைப்பர்-ஆட்டோமேஷன், ரோபாட்டிக்ஸ், கிளவுட், பகுப்பாய்வு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சேவைகளை அளித்து வருகிறது.

SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முக்கிய எச்சரிக்கை வெளியீடு!

கிட்டத்தட்ட ஆறு கண்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சேவைகளை அளித்து வரும் இந்நிறுவனத்தில் சுமார் 2,00,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிசெய்து வருகின்றனர். இப்போது விப்ரோ நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு அழைப்பு மற்றும் எதிர்பார்ப்பு குறித்த விரிவான விளக்கங்களை காணலாம்.

மூத்த மென்பொருள் பொறியாளர்

இந்த பதவிக்கு ஜாவா, J 2 EE, ஆங்குலர் 8, ஸ்பிரிங் பூட், ஹைபர்னேட் மற்றும் SQL அல்லது Oracle, மைக்ரோ சர்வீஸ் ஆகியவற்றுடன் வலை பயன்பாட்டு வளர்ச்சியில் குறைந்தபட்சம் 2 முதல் 4 வருட தொழில் அனுபவம் தேவை. இது தவிர, ஷிப்ட் மாடலில் வேலை செய்வதற்கான நெகிழ்வுத்தன்மை மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாகும். மூத்த மென்பொருள் பொறியாளர் பதவிக்கு பணியமர்த்தப்படும் நபருக்கு குர்கான் அல்லது ஹரியானா அலுவலகத்தில் பணியிடம் கொடுக்கப்படும்.

கிளவுட் ஒருங்கிணைப்பு ஆலோசகர்

கிளவுட் ஒருங்கிணைப்பு ஆலோசகர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கிளவுட் ஒருங்கிணைப்பு பற்றிய அறிவு, ஏதேனும் ஒரு தொழில்நுட்பம் அல்லது தொழில் பயிற்சி பகுதி பற்றிய ஆழமான அறிவுடன் இது சார்ந்த தொழில்களில் குறைந்தபட்சம் 5 முதல் 8 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. இந்த பதவிக்கு பணியமர்த்தப்படும் நபருக்கு பெங்களூரு அலுவலகத்தில் பணியிடம் கொடுக்கப்படும்.

மூத்த கட்டிடக் கலைஞர்

மூத்த கட்டிடக் கலைஞரின் பதவிக்கு குறைந்தபட்சம் 10 வருட அனுபவம் தேவை. விண்ணப்பதாரர் செயல்முறைகள், தரநிலைகள், தயாரிப்புகள் மற்றும் கட்டமைப்புகள் ஆகியவற்றுடன் குறிப்பிட்ட பல தொழில்நுட்பப் பகுதிகள் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டிருக்க வேண்டும். கூடுதலாக, கட்டிடக்கலை வரையறுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல், செயல்படாத கட்டடக்கலை தேவைகளை கைப்பற்றுவது மற்றும் ஆவணப்படுத்துதல், மதிப்பீடுகளை தயாரித்தல் மற்றும் முன்மொழிவுகளுக்கு (RFPs) தொழில்நுட்ப தீர்வுகளை வரையறுத்தல் ஆகியவற்றின் நிபுணர்களின் குழுவிற்கு வழிகாட்ட வேண்டும். இந்த பதவிக்கு பணியமர்த்தப்படும் நபருக்கு பெங்களூரு அலுவலகத்தில் பணியிடம் கொடுக்கப்படும்.

ஊதியம்:

விப்ரோவில், மூத்த மென்பொருள் பொறியாளர் பதவிக்கான ஊதிய விகிதம் ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கும். மேலும் கூடுதல் ஊதியம் ரூ.96,741 சராசரி அடிப்படையில் செலுத்தப்படுகிறது.

விண்ணப்பமுறை:

  • முதலில் விண்ணப்பதாரர்கள், Https://careers.wipro.com/global-india/jobs என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
  • முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் தேவையானதை கிளிக் செய்யவும்.
  • இப்போது அடுத்த பக்கத்தில் தோன்றும் அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்.
  • பூர்த்தி செய்த பிறகு தகவல்களை சமர்ப்பிக்கவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!