தமிழக மது பிரியர்களை குதூகலப்படுத்தும் ஒயின் திருவிழா – பாண்டிச்சேரியில் நாளை முதல் ஆரம்பம்!

0
தமிழக மது பிரியர்களை குதூகலப்படுத்தும் ஒயின் திருவிழா - பாண்டிச்சேரியில் நாளை முதல் ஆரம்பம்!
தமிழக மது பிரியர்களை குதூகலப்படுத்தும் ஒயின் திருவிழா - பாண்டிச்சேரியில் நாளை முதல் ஆரம்பம்!
தமிழக மது பிரியர்களை குதூகலப்படுத்தும் ஒயின் திருவிழா – பாண்டிச்சேரியில் நாளை முதல் ஆரம்பம்!

தமிழகத்தில் மது ஒழிப்பு என்னும் கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வரும் நிலையில் ஆட்சிக்கு வந்த பின்பு அரசியல் கட்சிகள் அதனை கண்டுகொள்வதில்லை. அரசுக்கு வருவாய் அளிப்பதில் முன்னனிலையில் டாஸ்மாக் உள்ளதால் மது ஒழிப்பு என்பது வெறும் வாய்மொழியாகவே உள்ளது. நமது அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் பிரதான வருமானமும் இதை நம்பியே உள்ளதால் சுற்றுலா பயணிகளை ஈர்க்க இத்தகைய விழாக்கள் நடப்பது வழக்கம் தான்.

ஒயின் திருவிழா :

உலகத்தின் ஏதோவொரு மூலையில் வழக்கத்திற்கு மாறாக வினோதமான அல்லது வித்தியாசமான நிகழ்வுகள் தினந்தோறும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது புது விதமாக புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா நடைபெற இருக்கிறது. அதாவது புதுச்சேரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக இந்த திருவிழாவை பழைய துறைமுக வளாகத்தில் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மேலும், நாளை (ஆக.20) முதல் 3 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த திருவிழாவை வாஸ்கோ மற்றும் fite n fusta ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ‘PONDY FOOD FETE 2022’ என்ற பெயரில் நடத்த சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. உணவு மற்றும் ஒயின் திருவிழா வார இறுதி நாட்களில் நடைபெற இருப்பதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் கலந்துக் கொள்வார்கள் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனும் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இந்த உணவு மற்றும் ஒயின் திருவிழாவில் மது பிரியர்களை குதூகலப்படுத்தும் விதமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒயின் வகைகள் இடம்பெறவுள்ளன. அதனால் புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டல்கள் கலந்து கொண்டு விதவிதமான உணவுகளை விருந்து படைக்க உள்ளனர். மேலும் இசைக் கச்சேரி, மேஜிக் ஷோ, விளையாட்டு நிகழ்ச்சிகளும், இதன் தொடக்க விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!