தமிழகத்தில் மின்தடை அபாயம் ஏற்படுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

0
தமிழகத்தில் மின்தடை அபாயம் ஏற்படுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
தமிழகத்தில் மின்தடை அபாயம் ஏற்படுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
தமிழகத்தில் மின்தடை அபாயம் ஏற்படுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

இந்தியாவில் மத்திய அரசு விதித்துள்ள தடையால் மின்தடை ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவல்கள் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்தடை அறிவிப்பு

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் மின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், போன்றவைகள் அதிகரித்து வருவதால் மின்சாரம் அதிக அளவில் உபயோகப்படுத்துகின்றனர். இதன் காரணமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மின் உற்பத்தியை அதிகரிக்க பல மின் ஒப்பந்தங்களை செய்து வருகிறது.

தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம் இந்தியாவில் மின் உற்பத்தி குறைய தொடங்கியதுதான். எனவே இதனை சரி செய்யும் பொருட்டு மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் நீர், காற்று, அனல், போன்றவைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர சூரிய சக்தி மூலமும் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் நிலக்கரி விலை அதிகரித்து உள்ளதால் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா!!! இதோ உங்களுக்கான செய்தி!!!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க விற்க நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் பல மின்பகிர்மான நிறுவனங்கள் ரூ.5100 கோடி நிலுவை தொகையை செலுத்த தவறியதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!