மத்திய அரசின் அக்னிபத் திட்டம் திரும்ப பெறப்படுமா? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விளக்கம்!

0
மத்திய அரசின் அக்னிபத் திட்டம் திரும்ப பெறப்படுமா? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விளக்கம்!
மத்திய அரசின் அக்னிபத் திட்டம் திரும்ப பெறப்படுமா? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விளக்கம்!
மத்திய அரசின் அக்னிபத் திட்டம் திரும்ப பெறப்படுமா? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விளக்கம்!

இந்திய ராணுவத்தில் இளைஞர்களை அதிகளவு சேர்க்க வேண்டுமென்று ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இத்திட்டத்தை திரும்ப பெற வாய்ப்பு இல்லை என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல் தெரிவித்துள்ளார்.

அக்னிபத் திட்டம்

இந்திய ராணுவத்தில் முப்படைகளில் இளைஞர்களை சேர்க்கும் வகையில் ‘அக்னிபத்’ என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி 4 ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களில் 25% பேர் மட்டுமே 4 வருடங்கள் முடிந்தபிறகு முப்படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அத்துடன் 75% பணியில் இருந்து விலக்கி கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 4 வருடங்களுக்கு பிறகு இளைஞர்கள் வெளியேற்றப்படுவதால் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பற்ற நிலை உருவாகும்.

Exams Daily Mobile App Download

அதனால் இத்திட்டத்துக்கு பல மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன் பல்வேறு தரப்பினர் இத்திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று இந்தியா முழுவதும் முழு பந்த்-ல் ஈடுபட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி நாட்டில் 500 ரயில்கள் வரை ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே இத்திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது.

Degree முடித்தவர்களுக்கான UPSC தேர்வு பற்றிய அறிவிப்பு – கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

அதனால் இந்த திட்டத்தை கைவிடுவது என்பது கேள்விக்குறியே. மேலும் இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியிருப்பதாவது, அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறும் கேள்விக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். அத்துடன் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் குற்றவாளிகளை கண்டறிந்து வன்முறைக்கு காரணமானவர்கள் கண்டறிப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டு நலன் சார்ந்த விஷயம் என்பதால் அதை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here