தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வுகள்:

தமிழகத்தில் தற்போது அனைத்து பள்ளிகளும் வழக்கம் செயல்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியதால் மக்கள் பழைய நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி பள்ளிகள் தொடங்கபட்டு, நடப்பு ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. மேலும் தேர்வு முடிவுகள் வெளியாகி அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

கொரோனா காலத்தில் விடப்பட்ட இடைவெளியினால் மாணவர்களின் கற்றல் திறன் குறையத் தொடங்கியது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் பல புதிய கல்வி முறைகளை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து, சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், 11ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்ப தேவையில்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எப்போது? வலுக்கும் கோரிக்கை!

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக 11ம் வகுப்பு பாடங்களை நடத்தாமலே நேரடியாக 12ம் வகுப்பு பாடங்களை நடத்த ஆரம்பிக்கின்றனர். மேலும் 11ஆம் வகுப்பு பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் போட்டித் தேர்வுகளின் போது மாணவ, மாணவிகள் சிரமப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், மேலும் இந்த பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது குறித்து எந்த ஒரு எண்ணமும் இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here