தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலி!

0
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலி!

தமிழகத்தில் கொரோனா பரவல் 2500ஐ கடந்த நிலையில் பள்ளிகள் மூடப்படுமா எனவும், மீண்டும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற இருக்கிறதா எனவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனிடையே, பெற்றோர்களுமே பள்ளிகளை மூட கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதிகரிக்கும் கொரோனா:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தான் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தகுந்த நடவடிக்கை எடுத்தாலும் கூட கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. அதாவது, மக்களின் அலட்சியத்தால் மட்டுமே கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது. எனவே, கொரோனா தீவிரத்தை மனதில் கொண்டு கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையே, தமிழகத்தில் மட்டுமே நாள் ஒன்றிற்கு 2,500 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், சென்னையில் மட்டுமே 1000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதனால், நாளுக்கு நாள் கொரோனா பரவல் இரட்டிப்பாகி கொண்டே செல்வதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே, கடந்த ஜூன் 13 ஆம் தேதியில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்துடன், கொரோனா பரவும் வேகத்தையும் பார்த்து பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இருப்பினும், அனைத்து பள்ளிகளிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், மாணவர்கள் கட்டாயமாக பள்ளிக்கு வரும்போது மாஸ்க் அணிந்து தான் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலமான வகுப்புகளை தொடங்கலாம் என பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து, பள்ளிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தும்படி அனைத்து பள்ளி நிர்வாகத்திற்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here