இந்தியாவில் பெட்ரோல் விலை 30% குறையுமா? கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

0
இந்தியாவில் பெட்ரோல் விலை 30% குறையுமா? கவுன்சில் கூட்டத்தில் முடிவு!
இந்தியாவில் பெட்ரோல் விலை 30% குறையுமா? கவுன்சில் கூட்டத்தில் முடிவு!
இந்தியாவில் பெட்ரோல் விலை 30% குறையுமா? கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

இந்தியாவில் 6 மாதங்களுக்கு பிறகு ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிலையில் பெட்ரோல் விலை 30 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெட்ரோல் விலை:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா மற்றும் அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எப்பொழுதும் சர்வதேச சந்தையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கபட்டு வருகிறது. தற்போது ஊரடங்கால் மக்கள் வேலையிழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தினந்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விலை ஏற்றத்தை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மத்திய அரசு தலையிட்டு விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

Exams Daily Mobile App Download

இதன் பிறகு பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி குறைக்கப்பட்டது. எனவே, பெட்ரோலியப் பொருட்களின் விலை மிகப் பெரிய அளவில் குறைந்தது. எனினும் அடுத்து வந்த நாட்களில் மீண்டும் விலை உயர ஆரம்பித்தது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெட்ரோல் விலை 30 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 6 மாதங்களுக்கு பிறகு ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

Today Tamil Current Affairs – June 28, 2022

47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று சண்டிகரில் நடைபெற உள்ளது. இதனை அடுத்து ஜிஎஸ்டி வரி வரம்புகள் அமலுக்கு வந்து 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல் விலையை தொடர்ந்து மதுபானங்களின் விலை 17 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!