இந்த வருட தீபாவளிக்கு போனஸ் கிடைக்குமா? காத்திருக்கும் ஊழியர்கள் – வலுக்கும் கோரிக்கை!

0
இந்த வருட தீபாவளிக்கு போனஸ் கிடைக்குமா? காத்திருக்கும் ஊழியர்கள் - வலுக்கும் கோரிக்கை!
இந்த வருட தீபாவளிக்கு போனஸ் கிடைக்குமா? காத்திருக்கும் ஊழியர்கள் - வலுக்கும் கோரிக்கை!
இந்த வருட தீபாவளிக்கு போனஸ் கிடைக்குமா? காத்திருக்கும் ஊழியர்கள் – வலுக்கும் கோரிக்கை!

தீபாவளி என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது போனஸ் தான். அது இந்த வருடம் கிடைக்குமா இல்லையா என்று திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

தீபாவளி போனஸ்:

சிறு நிறுவனங்கள் முதல் மிகப் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்தும் தங்கள் ஊழியர்களுக்கு அவர்களின் வருடம் முழுவதுமான உழைப்பின் பலனாக தீபாவளி சமயத்தில் போனஸ் தருகின்றனர். இது ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் மாறுபடுகின்றது. ஒரு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் என்றும் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் திறனுக்கு ஏற்ற வகையிலும் போனஸ் வழங்குகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஒரு சில முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பணத்தை செலுத்த தொடங்கியுள்ளனர் ஆனால் சிறு நிறுவனங்கள் இன்னும் தீபாவளி போனஸ் அளிப்பது பற்றி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இதனால் ஊழியர்களுக்கு இந்த வருடம் தீபாவளி போனஸ் கிடைக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி உற்பத்தியில் மிகவும் பெரிய அளவிலான வருமானத்தை ஈட்டித்தரும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கடந்த ஒரு ஆண்டாக மிகவும் பெரிய அளவிலான லாபத்தை ஈட்ட வில்லை. மேலும் நூல் விலை ஏற்றம், ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் மற்றும் பொருளாதார மந்த நிலை போன்ற பல காரணங்களால் இந்த தொழில் சரிவை சந்தித்துள்ளது. இதனால் ஒரு சில ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படும் அபாயமும் நிகழ்ந்து வருகிறது.

போட்டி தேர்விற்கு தயாராகுறீங்களா? தமிழக அரசு உங்களுக்கு கொடுத்துள்ள சூப்பர் சான்ஸ் – மிஸ் பண்ணிடாதீங்க!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் திருப்பூர் தொழிலாளர் சங்கங்கள் அனைத்தும் நிறுவனங்களிடமும் இது குறித்த கோரிக்கையை வைத்துள்ளதாகவும் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் நிறுவனங்களின் சார்பாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஊழியர்களுக்கு மிகவும் சிறப்பான வகையில் தீபாவளி போனஸ் அளிக்கப்படும் என்றும் பண்டிகையை ஊழியர்கள் சிறப்பிக்கும் வகையில் தீபாவளிக்கு முன்னதாகவே போனஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!