மெகா சங்கமத்தில் கோபியின் திருட்டுத்தனம் வெளிப்படுமா? – பாக்கியலட்சுமி சீரியல் ட்விஸ்ட்!

0

மெகா சங்கமத்தில் கோபியின் திருட்டுத்தனம் வெளிப்படுமா? – பாக்கியலட்சுமி சீரியல் ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மெகா சங்கமம் வரும் வாரத்தில் வர உள்ளது. இந்த எபிசோடுகளில் கோபியின் திருட்டுத்தனம் வெளியாகுமா என்ற மிகப்பெரிய ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மெகா சங்கமம்:

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி எந்த பிரச்சனை என்றாலும் அதை பாக்கியா தலையில் கட்டி விட்டு சென்று விடுவார். குடும்பத்திற்காக பார்த்து பார்த்து அனைத்தையும் செய்யும் பாக்கியாவிற்கு கடைசியில் மிஞ்சுவது உதாசீனம் மட்டுமே. கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார். தனது மனைவி பாக்கியா சிறைக்கு செல்லும் போது கூட கவலைப்படாமல், ராதிகா மற்றும் பாக்கியாவை பிரித்து விட்ட சந்தோஷத்தில் இருந்தார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் முல்லை காவியா அறிவுமணி – வெளியான தகவல்!

இந்நிலையில், வரும் வாரத்தில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் இணைந்து வரும் மெகா சங்கமம் காட்சிகள் வர உள்ளது. இதில், கோபி மாட்டுவாரா என்ற எதிர்பார்த்து ஒரு பக்கம் அதிக அளவில் இருந்து வந்தாலும், அதற்கு தற்போதைக்கு வாய்பில்லை என்பது தான் நிஜம். இதனால் எழில், அம்ரிதாவின் கல்யாண பேச்சு தான் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் ஈஸ்வரிக்கு பிடிக்கவில்லை.

ஆனால் ஜெனி, செல்வி மற்றும் பாக்கியா மூவரும் சேர்ந்து எழிலின் இந்த திருமண ஆசைக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோபி பாக்கியா மற்றும் ஈஸ்வரிக்கு இடையில் பிரச்சனையை உண்டு பண்ண நினைக்கிறார். வழக்கம் போல் இதில் கோபியின் திட்டம் நிறைவேறி விடும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் இந்த விஷயத்தில் ஏதாவது சுமூகத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது. இது தொடர்பான காட்சிகள் தான் மெகா சங்கமத்தில் வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here