பாக்கியாவை காப்பாற்ற எழிலின் புதிய முயற்சி, உண்மை தெரிய வருமா? “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த திருப்பம்!

0
பாக்கியாவை காப்பாற்ற எழிலின் புதிய முயற்சி, உண்மை தெரிய வருமா?
பாக்கியாவை காப்பாற்ற எழிலின் புதிய முயற்சி, உண்மை தெரிய வருமா? "பாக்கியலட்சுமி" சீரியலில் அடுத்த திருப்பம்!
பாக்கியாவை காப்பாற்ற எழிலின் புதிய முயற்சி, உண்மை தெரிய வருமா? “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த திருப்பம்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா செய்த சாப்பாட்டை சாப்பிட்டு குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் போலீசார் பாக்கியாவை கைது செய்து இருக்கின்றனர். இந்நிலையில் எழில் உண்மையை கண்டுபிடிக்க பல முயற்சிகளை செய்ய இறுதியில் உண்மை வெளியே வருகிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகா இணைந்து அனாதை குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடிவு செய்கின்றனர். ராதிகா பாக்கியாவிடம் ஆர்டர் கொடுக்க பாக்கியா அதை சமைத்து கொடுக்கிறார். ஆனால் கோபியின் திட்டத்தால் செல்வி தான் அந்த ஆர்டரை கொண்டு சென்று கொடுக்கிறார். அதை கோபியும் ராதிகாவும் பரிமாற அதை சாப்பிட்டு குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தைகள் இருக்கின்றனர்.

இயற்கையாகவே கருவுற்ற முல்லை – வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

அப்போது பாக்கியா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பாக்கியாவை போலீசார் கைது செய்து கேஸ் போடுகின்றனர். பாக்கியா நான் எந்த தவறும் செய்யவில்லை என சொல்லி கூட யாரும் நம்பவில்லை. ராதிகா பாக்கியா தான் இந்த நிலைமைக்கு காரணம் என்பதால் அவர் எதுவும் பேசாமல் இருக்கிறார். இந்நிலையில் எழில் வந்து பார்க்க பாக்கியா நான் சரியாக தான் சமைத்தேன் ஏன் இப்படி ஆனது என தெரியவில்லை என சொல்கிறார்.

பாக்கியாவை போலீசில் சிக்க வைத்த கோபி, உண்மையை கண்டறிவாரா எழில்? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இப்படி இருக்க எழில் செல்வியிடம் யாரெல்லாம் சேர்ந்து சமைத்தீர்கள் என கேட்கிறார். அப்போது செல்வி எல்லாரும் சேர்ந்து சமைத்ததாக சொல்கிறார். அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் எழில் உண்மையை கண்டுபிடிக்க போகிறார். அதாவது செல்வி சாப்பாடு கொடுக்கும் போது ஹோட்டலில் இருந்து லட்டு வருகிறது. அதை பார்த்து சொல்ல எழில் அந்த ஆசிரமத்தில் மீதி உள்ள லட்டு இருக்கிறதா என பார்த்து உண்மையை கண்டுபிடிக்க போகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here