ஜீ தமிழ் ‘சர்வைவர்’ நிகழ்ச்சி வைல்டு கார்டு என்ட்ரியில் 2 போட்டியாளர்கள் – வெளியான ப்ரோமோ!

0
ஜீ தமிழ் 'சர்வைவர்' நிகழ்ச்சி வைல்டு கார்டு என்ட்ரியில் 2 போட்டியாளர்கள் - வெளியான ப்ரோமோ!
ஜீ தமிழ் 'சர்வைவர்' நிகழ்ச்சி வைல்டு கார்டு என்ட்ரியில் 2 போட்டியாளர்கள் - வெளியான ப்ரோமோ!
ஜீ தமிழ் ‘சர்வைவர்’ நிகழ்ச்சி வைல்டு கார்டு என்ட்ரியில் 2 போட்டியாளர்கள் – வெளியான ப்ரோமோ!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சர்வைவர் நிகழ்ச்சி 34 நாட்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், புதிதாக 2 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக வர இருப்பதாக ப்ரோமோ வெளியாகி உள்ளது.

சர்வைவர்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய முயற்சியாக பிரபலங்கள் கலந்து கொள்ளும் சர்வைவர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 30 நாட்கள் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கடுமையான டாஸ்குகள், உணவு தேடுதல், எலிமினேஷன் அதனால் வரும் பிரச்சனைகள் என சர்வைவர் போட்டியாளர்கள் எக்கச்சக்க சவால்களை சந்தித்து வருகின்றனர். இருப்பினும் போட்டியில் கடைசி வரை இருந்து ஜெயித்து ஒரு கோடி ஜெயிக்க வேண்டும் என உறுதியாகவும் இருக்கின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலம் ஐஸ்வர்யாவிற்கு விரைவில் திருமணம் – கணவருடன் ஷாப்பிங்!

இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் புதிதாக இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக களமிறக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் நடிகர் இனிகோ பிரபாகர் மற்றும் வனேசா அகியோர் ஆவார். வனேசா மலேசியாவை சேர்ந்த மாடல் மற்றும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் காடர்கள் டீமில் இணைய இருக்கிறார். பிரபாகரன் வேடர்கள் டீமில் இணைகிறார். இரண்டு வாரம் கழித்து எல்லாம் செட் ஆன பிறகு அவர்கள் ஷோவில் இணைவது Not Fair என லட்சுமி பிரியா கருத்து கூறி உள்ளார்.

‘பிக் பாஸ் சீசன் 5’ பிரம்மாண்ட செட் – ‘ஆரம்பிக்கலாமா’ கமல் வசனத்துடன் வெளியான ப்ரோமோ!

மற்ற போட்டியாளர்களும் நாம் இத்தனை நாள் கஷ்டப்பட்டு இருக்கும் போது இடையில் அவர்கள் வருவது சரியாக இருக்காது என்ற மனநிலைமையில் தான் இருக்கிறார்கள். மற்றொரு ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸ் பாணியில் ஒரு டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு போட்டியாளரும் சர்வைவரில் கடைசி வரை யாருடன் இருக்க விரும்புகிறீர்கள், யாருடன் இருக்க விரும்பவில்லை என சொல்ல சொல்வது போல காட்டப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here