தமிழகத்தில் கடைகளை மூடிய ‘விட்கோ’ நிறுவனம் – 65 வருட வரலாறு முடிவுக்கு வந்தது!

0
தமிழகத்தில் கடைகளை மூடிய 'விட்கோ' நிறுவனம் - 65 வருட வரலாறு முடிவுக்கு வந்தது!
தமிழகத்தில் கடைகளை மூடிய 'விட்கோ' நிறுவனம் - 65 வருட வரலாறு முடிவுக்கு வந்தது!
தமிழகத்தில் கடைகளை மூடிய ‘விட்கோ’ நிறுவனம் – 65 வருட வரலாறு முடிவுக்கு வந்தது!

65 வருடமாக செயல்பட்டு வந்த விட்கோ நிறுவனம் கொரோனா காரணமாக பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இதன் விளைவாக மொத்தமாக தங்கள் விற்பனையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. விட்கோவின் முடிவு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விட்கோ நிறுவனம்:

தமிழ்நாட்டில் 1970 ஆம் ஆண்டு விட்கோ என்ற லக்கேஜ் தயாரித்து விற்கும் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் முதலில் 1951ல் ஜார்ஜ் டவுனில் தொடங்கப்பட்டது. வெஸ்ட் இந்தியா பிளாஸ்டிக் டிரேடிங் கோ என்ற பெயரில் எம்பிசி முகமது மூலம் பிளாஸ்டிக் விற்பனை நிறுவனம் தொடங்கப்பட்டது. பின் இந்த நிறுவனம் விட்கோவாக மாறி புதிய பிராண்ட் ஆனது. லக்கேஜ் விற்பனையில் இறங்கியது. சொந்தமாக லக்கேஜ் உருவாக்கி அதை விற்பனை செய்து வந்தது. விட்கோ பேக்ஸ், விட்கோ ஸ்கூல் பேக்ஸ், விட்கோ டிராலி, விட்கோ சூட்கேஸ் போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது.

TN Job “FB  Group” Join Now

ssc

இதன் பிறகு லக்கேஜ் விற்பனையில் மட்டுமே கவனம் செலுத்தி விட்கோ தனிப்பெரும் நிறுவனமாக உருவெடுத்தது. 1990ல் தமிழகம் முழுக்க பல இடங்களில் விட்கோ லக்கேஜ் தொடங்கப்பட்டது. பின் தமிழகம் தாண்டி இந்தியாவின் மற்ற பிற மாநிலங்களிலும் உள்ள பெருநகரங்களுக்கும் விட்கோ விரிவடைந்து. அழகான வடிவமைப்பு, நீடித்த தரம், குறைந்த விலை இவற்றால் வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டனர். கடந்த 2010க்கு பின் புதுப்பொலிவு பெற்ற விட்கோ தமிழகம் முழுக்க பல இடங்களில் சிறிய மற்றும் பெரிய ஷோரூம்களை உருவாக்கியது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) உயர்வு – ஜூன் மாதம் கூட்டம்!

இந்த நிலையில் கொரோனா பரவலால் இந்த நிறுவனம் பெரிய சரிவை சந்தித்தது. சுற்றுலாத்துறை, பயணம், பள்ளிகள் திறப்பு போன்றவைகள் கொரோனாவால் இல்லை. எனவே மக்கள் பேக், லக்கேச் போன்றவைகளை வாங்குவதில்லை. இதனால் பொருளாதார ரீதியாக பெரிய இழப்பை சந்தித்தது. கடந்த ஒன்றரை வருடமாக பெரிதாக விற்பனை இன்றி அந்த நிறுவனம் முடங்கியது. இதனால் சென்னை தாண்டி பல இடங்களில் விட்கோ ஷோரூம் மூடப்பட்டு வந்தது. சென்னையின் ஒரு அடையாளமாக விளங்கி வந்த விட்கோ தமிழகத்தில் தற்போது மொத்தமாக தங்கள் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!