முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு? முக்கிய அறிவிப்பு இன்று வெளியீடு!
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு உத்தரவானது இன்றுடன் (ஜூன் 19) முடிவடைவதால், ஊரடங்கு தொடருமா என்பது குறித்து விவாதிக்க மாநில அமைச்சரவை கூடியுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா முழு ஊரடங்கு காரணமாக தெலுங்கானாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கு உத்தரவானது, இன்றுடன் (ஜூன் 19) முடிவடையவுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்து வருவதால், முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகள் கொடுக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான மாநில அமைச்சரவை கூட்டம் இன்று (ஜூன் 19) நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கம் – முக ஸ்டாலின் இன்று ஆலோசனை!
இந்த கூட்டத்திற்கு பிறகு முழு ஊரடங்கு தொடர்பான முக்கிய முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவசாயத்தில் பருவமழையின் தாக்கம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களை குறித்து விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜூன் 8 ஆம் தேதிக்கு பிறகு தெலுங்கனா மாநிலத்தில், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தது.
TN Job “FB
Group” Join Now
மேலும் பொது மக்கள் தங்கள் அலுவலகங்களிலிருந்து வீடு திரும்புவதற்கு ஏற்றவாறு ஒரு மணி நேரம் கூடுதலாக, மாலை 6 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர தெலுங்கானாவில் நேற்று (ஜூன் 19) ஒரே நாளில் 1417 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அம்மாநிலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 588,259 பேர் குணமடைந்துள்ளனர். அந்த வகையில் கொரோனா பாதிப்பில் மீட்பு விகிதம் 96.30%மாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.