இந்தியாவில் நாளுக்கு நாள் வீரியமடையும் கொரோனா – WHO எச்சரிக்கை!

0
இந்தியாவில் நாளுக்கு நாள் வீரியமடையும் கொரோனா - WHO எச்சரிக்கை!
இந்தியாவில் நாளுக்கு நாள் வீரியமடையும் கொரோனா - WHO எச்சரிக்கை!
இந்தியாவில் நாளுக்கு நாள் வீரியமடையும் கொரோனா – WHO எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே தான் இருப்பதாகவும், இறப்பு விகிதமும் அதிகரித்து வருவதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பரவல்

நாடு முழுவதும் உள்ள பொது மக்களை கொரோனா தொற்று இன்னும் துரத்திக்கொண்டே தான் இருந்து வருகிறது. என்ன தான் நாடு முழுவதும் கொரோனா தொற்று நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் மொத்தமாக கொரோனா தொற்றினை ஒழிக்க முடியாமல் சுகாதார இயக்கம் தவித்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் குறித்தான செய்தி வெளியாகவில்லை. இதனால், கொரோனா தொற்று குறைந்துவிட்டதாக நினைத்து பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட துவங்கி விட்டனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது, இன்னும் கொரோனா குறையவில்லை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும், இந்த 2022 ஆம் ஆண்டில் மட்டுமே 10 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், நாட்டில் தற்போதும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருந்து வருகிறது. இதனால், பொது மக்களை விழிப்புணர்வுடன் இருக்கும்படி WHO எச்சரித்துள்ளது.

TNPSC குரூப் 4 & VAO எழுதியவர்கள் கவனத்திற்கு – Result எப்போது? முழு விவரம் இதோ!

மேலும், பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியையும் செலுத்தியிருக்க வேண்டும் எனவும் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள 100 சதவீத மக்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திவிட்டனர் என்கிற நிலையை உருவாக்க தான் உலக சுகாதார நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. மேலும், பொதுமக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க முடியும் என அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!