விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தகவல்கள்!

0
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தகவல்கள்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தகவல்கள்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தகவல்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடத்தி வரும் சதிஷ் 2000ம் ஆண்டு முதல் சின்னத்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் ஏகப்பட்ட திரைப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவரை குறித்த பல தகவல்கள் சமூக வலைதளபக்கத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

முக்கிய தகவல்கள்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்கள் அனைத்தையும் மக்கள் அதிகம் விரும்பி பார்த்து வருகின்றனர். பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சீரியலில் ஒரு குடும்ப தலைவியின் உணர்வுகளை கூறும் விதமாக இந்த கதை அமைந்திருப்பதால் இது வீட்டில் இருக்கும் பெண்களை மட்டுமல்லாமல் பல தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அந்த தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். சீரியலில் கோபி கதாபாத்திரத்திற்கு ஒரு அழகான குடும்பம் இருந்தும் அதை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது போல காட்டப்படும். மேலும் கோபி தனது நடிப்பினால் அனைவராலும் வெறுக்கப்படும் நடிகர் ஆகிவிட்டர்.

இந்தியாவில் இன்றிரவு தெரியும் “பிங்க் மூன்” – ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணாம பாருங்க!

ஏனென்றால் பாக்கியலட்சுமி சீரியலை பார்க்கும் ரசிகர்கள் அந்த அளவுக்கு கோபியை திட்டித் தீர்த்து வருகிறார்கள். கோபியின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவரின் உண்மையான பெயர் சதிஷ். சின்னத்திரை நடிகரான சதீஷ் சூலம், ஆனந்தம், கல்யாண பரிசு, மகாராணி உள்ளிட்ட பல்வேறு தமிழ் சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால் மற்ற சீரியல்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பும், புகழும் இவர் தற்போது நடித்து வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மூலம் அவருக்கு கிடைத்திருக்கிறது. நடிகர் சதீஷ், 1979ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். சென்னையில் பிறந்த இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.

10, ITI & டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!

தமிழ் சின்னத்திரையில் நடிகராகவும், மாடலாகவும் நமக்கு அறியப்படும் நடிகர் சதீஷ் 1999ம் ஆண்டு தமிழில் வெளியான ‘மின்சார பூவே’ என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் தனி ஒருவன், இருமுகன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு படத்தில் மிக சிறப்பாக ஒரு வேடத்தில் நடித்திருப்பார். இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திலேயும் நடித்துள்ளார். அந்த புகைப்படங்களை அவரே இதற்கு முன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தை தொடங்கி வைத்தது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவர். சீரியல்கள் மற்றும் திரைப்படங்களை தொடர்ந்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் என்றால், அந்த கதாபாத்திரத்திற்கு 100 % உழைப்பு கொடுப்பாராம் அதனாலேயே இவருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!