விஜய் டிவி “பாக்கியலட்சுமி” கோபி யார் தெரியுமா? இது வரை தெரியாத பல தகவல்கள்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" கோபி யார் தெரியுமா? இது வரை தெரியாத பல தகவல்கள்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” கோபி யார் தெரியுமா? இது வரை தெரியாத பல தகவல்கள்!

தற்போது விஜய் டிவியில் டாப் சீரியலாக இருக்கும் “பாக்கியலட்சுமி” சீரியலின் கதாநாயகன் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சதீஸ் அவர்களின் சினிமா பயணம் பற்றி பலர் அறியாத தகவல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் சதீஸ்:

விஜய் டிவி சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். பல புதுமையான கதையுடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கின்றன. அந்த வகையில் இல்லத்தரசிகளின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது கோபி கதாபாத்திரம் தான். கோபியாக நடிகர் சதீஸ் நடித்து வருகிறார். 90’ஸ் காலத்தில் இருந்து அவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

அதன் பின் சின்னத்திரைக்கு வந்த அவர் முதன்முதலில் சன்டிவியில் ஒளிபரப்பான மந்திர வாசல் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் சூலம், கல்யாண பரிசு2, ஆனந்தம், திருமதி செல்வம், வம்சம், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், ரங்கல விலாஸ், குலதெய்வம், பொன்னூஞ்சல் என ஏகப்பட்ட சீரியலில் நடித்து சின்னத்திரையில் பிரபலமான நடிகர்களில் ஒருவரானார். அதன் பின் விஜய் டிவியில் மகாராணி என்ற சீரியலில் அவர் நடித்து இருக்கிறார்.

கண்ணம்மாவிற்கு வில்லனாக வரும் ரோஹித் – புதிய திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்!

ஆனால் அவருக்கு இத்தனை சீரியல்கள் கொடுக்காத பெருமையை பாக்கியலட்சுமி சீரியல் கொடுத்துள்ளது. தமிழக மக்கள் அனைவரும் கோபி பாக்கியாவை ஏமாற்றுவதை பார்த்து கொந்தளிப்பில் இருக்கின்றனர். கோபி மாட்டிக் கொள்ள வேண்டும் என மக்களின் வேண்டுதல் தற்போது நடந்துள்ளது. பலர் சதீஸ் கோபியாக நடிக்கிறார் என்பதை மறந்து சமூக வலைத்தளங்களில் அவரை திட்டி குவித்து வருகின்றனர். அதனால் மனம் வருத்தப்பட்ட சதீஸ் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!