சன் டிவி “சித்தி 2” சீரியல் ப்ரீத்தி சர்மா யார் தெரியுமா? இதுவரை அறியாத தகவல்!

0
சன் டிவி
சன் டிவி "சித்தி 2" சீரியல் ப்ரீத்தி சர்மா யார் தெரியுமா? இதுவரை அறியாத தகவல்!
சன் டிவி “சித்தி 2” சீரியல் ப்ரீத்தி சர்மா யார் தெரியுமா? இதுவரை அறியாத தகவல்!

சின்னத்திரையில் சன் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கும் நிலையில் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலர் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சித்தி 2 சீரியலில் நடித்து பிரபலமான ப்ரீத்தி சர்மா யார் என்பது பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை ப்ரீத்தி ஷர்மிளா:

அந்த காலம் முதல் பலர் சன் டிவி சீரியல்களை விரும்பி பார்க்கின்றனர். சன் டிவி சீரியல்கள் நல்ல குடும்பக் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் அனைத்து தரப்பினரையும் சீரியல் மோகத்தில் வைத்திருக்கிறது. அந்த வகையில் பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடி முடிவடைந்துள்ளது. அதில் இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சீரியல்கள் இருக்கின்றனர். அதில் ஒன்று தான் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான சித்தி சீரியல்,

Exams Daily Mobile App Download

சித்தி சீரியலின் வரவேற்பை பார்த்து சித்தி 2 சீரியல் புதிய பரிமாணங்களுடன் தொடங்கப்பட்டது. அதிலும் ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் களமிறங்கினார். இந்த காலத்திற்கு ஏற்றார் போல கதை அம்சத்தை கொண்டதால் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்தது. இந்த சீரியல் பாதியில் ராதிகா சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக முன்னணி நடிகை ப்ரீத்தி சர்மா களமிறங்கினார். ப்ரீத்தி ஷர்மா உத்திர பிரேதச மாநிலத்தில் உள்ள லக்னோவில் பிறந்தவர்.

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் மொத்த சொத்து மதிப்பு – ரசிகர்கள் ஷாக்!

இவர் 10 ஆம் வகுப்பு வரை படித்த ப்ரீத்தி ஷர்மா மாடலிங் துறை மேல் உள்ள ஆர்வத்தால் படிப்பை நிறுத்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் முதன்முதலாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். டிக்டாக் செயலியில் ஸ்டாராக அவர் இருந்திருந்தார். சித்தி 2 சீரியல் மட்டுமல்லாமல் தெலுங்கில் ‘காவியாஞ்சலி’ என்ற சீரியலிலும் நடித்து வந்தார். இந்நிலையில் இந்த 2 சீரியல்களும் முடிந்துவிட்டாலும் ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!