பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் கோபி சதீஷ் யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்கள்!

0
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் கோபி சதீஷ் யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்கள்!
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் கோபி சதீஷ் யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்கள்!
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் கோபி சதீஷ் யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்கள்!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதிஷ் குறித்தான சுவாரசியமான பல தகவல்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் கோபி இத்தனை திரைப்படங்களில் நடித்திருக்கிறாரா என வியப்படைந்துள்ளனர்.

நடிகர் சதீஷ்

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது தான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை கோபி திருமணம் செய்து கொள்வாரா என பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. டிஆர்பியிலும் பாக்கியலட்சுமி தொடர் தான் முன்னிலையில் இருந்து வருகிறது. பெரும்பாலானோர் கோபிக்காக மட்டுமே அந்த சீரியலை பார்த்து வருகின்றனர். இவரது நடிப்பிற்கு ஆஸ்கார் விருதே வழங்கலாம் போல. அந்த அளவுக்கு கோபியின் முக பாவனைகள் அனைத்துமே ரசிக்கத் தக்கதாக இருந்து வருகிறது.

ExamsDaily Mobile App Download

கோபியின் கதாபாத்திரத்தில் இவருக்கு பதிலாக வேறு எவராது நடித்திருந்தால் கூட இந்த சீரியல் இந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்குமா என்பது தெரியவில்லை. தற்போது கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதிஷ் குறித்தான சுவாரசியமான பல தகவல்கள் வெளியாகியுள்ளது. மின்சார பூவே என்கிற திரைப்படத்தின் மூலமாக தான் கோபி திரையுலகில் அறிமுகமாகியிருக்கிறார்.இதற்கு பிறகு ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு, எம்.ஜி.ஆர் ன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் முதலான வரலாற்று திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் கோபிக்கு மிக பெரிய அளவில் ரீச்சை கொடுத்தது.

முல்லையின் பிரசவ விவகாரத்தால் இரண்டாக பிரியப்போகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

இந்த வரலாற்று திரைப்படங்களை தொடர்ந்து இருமுகன் மற்றும் தனி ஒருவன் ஆகிய திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படங்களுக்கு பிறகு தான் கோபிக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மந்திரவாசல் சீரியல் மூலமாக அறிமுகமான சதிஷ் அடுத்தடுத்து சூலம், ஆனந்தம், கல்யாண பரிசு, மகாராணி முதலான சீரியல்களில் நடித்தார். இந்த சீரியலுக்கு பிறகு தான் கோபிக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் தூள் கிளப்பி கொண்டிருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!