சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் மைக் ஹஸ்ஸி இவர் தான்? கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் மைக் ஹஸ்ஸி இவர் தான்? கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் மைக் ஹஸ்ஸி இவர் தான்? கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் மைக் ஹஸ்ஸி இவர் தான்? கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து!

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி சூப்பர், டூப்பர் பார்மில் இருக்கும் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டெவோன் கான்வே, முன்னாள் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் மைக்கேல் ஹஸ்ஸி போன்றவர் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டெவோன் கான்வே

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ககிசோ ரபாடா போன்றவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்ட நிலையில், அதிகளவு விலைக்கு ஏலம் போகாத சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் வீரர் டெவோன் கான்வே தனது அதிரடியின் மூலம் கவனம் பெற்றிருக்கிறார். நியூசிலாந்து அணிக்காக அனைத்து வடிவங்களிலும் சிறந்த ஃபார்மில் இருந்த கான்வே தனது அடிப்படை விலையான ரூ. 1 கோடிக்கு CSK அணியால் வாங்கப்பட்டார். பொதுவாக ஏலத்திற்குச் செல்லும்போது, தங்கள் ரேடாரில் இருக்கும் வீரர்களைப் பற்றி விவாதிப்பதற்கு உரிமையாளர்களால் அதிக நேரம் செலவிடப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இருப்பினும், எம்எஸ் தோனி தலைமையிலான CSK அணியில் இப்போது பரபரப்பான ஃபார்மில் இருக்கும் கான்வேயின் சிறப்பு எதையும், முன்பு உரிமையாளர்கள் காணவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸுக்கு (DC) எதிரான போட்டியில், கான்வே 49 பந்துகளில் 87 ரன்களை விளாசியதன் மூலம் CSK அணியால் 208 ரன்கள் குவிக்க முடிந்தது. இதற்கு முந்தைய ஆட்டத்தில் கூட, கான்வே 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணியின் அதிக ஸ்கோராக உருவெடுத்தார். மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 55 பந்துகளில் 85 ரன்கள் எடுத்த கான்வேயின் ஹாட்ரிக் அரை சதம் இதுவாகும்.

இப்போது DCக்கு எதிரான அவரது அதிரடிக்கு பிறகு, கிரிக்கெட் விமர்சகர்கள் அவரது ஆட்டத்தை முன்னாள் CSK வீரர் மைக்கேல் ஹஸ்ஸியுடன் ஒப்பிட்டுள்ளனர். இது குறித்து வாசிம் ஜாஃபர் வெளியிட்ட ட்வீட்டில், ‘ஒரு லேட் ப்ளூமர் லெப்டி கீழிருந்து நன்றாக ஸ்பின் விளையாடுகிறார். சர்வதேச வாழ்க்கைக்கு ஒரு சிறந்த தொடக்கத்தைக் கொடுத்தார். இப்போது CSK அணிக்காக பேட்டிங்கை நன்றாகத் தொடங்குகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கான்வே கூறும்போது, ‘சில முறை கேள்விப்பட்டிருக்கிறேன். இது மிகவும் நன்றாக இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – பிளே ஆஃப்களில் நுழைவதற்கான வாய்ப்பு?

என்னை சிறந்தவர்களில் ஒருவரான மைக் ஹஸ்ஸியுடன் ஒப்பிடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த அடைப்புக்குறிக்குள் இருப்பது நல்லது. அவர் ஐபிஎல்லில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவர். அதனால் ஒரு வீரராக அவருடன் தொடர்ந்து பேசுவதும், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதும், கடினமாக உழைப்பதும் எனக்கு மிகவும் முக்கியம்’ என்று தெரிவித்துள்ளார். இப்போது ருதுராஜ் கெய்க்வாட்டைப் போலவே, கான்வே தனது முழுமையான வடிவத்தை கண்டுபிடித்துவிட்டால், நீண்ட காலத்திற்கு CSK அணியில் நீடித்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!