இந்தியாவிலேயே முதல் முறையாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி – WHO அறிவிப்பு!

0
இந்தியாவிலேயே முதல் முறையாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி - WHO அறிவிப்பு!
இந்தியாவிலேயே முதல் முறையாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி - WHO அறிவிப்பு!
இந்தியாவிலேயே முதல் முறையாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி – WHO அறிவிப்பு!

இந்தியாவிலேயே முதன்முறையாக மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் மூலமாக கொரோனாவை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைப்பு இதற்கு ஆதரவு அளித்துள்ளது

கொரோனா:

கடந்த 2020 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தற்போது வரைக்கும் தீவிரமாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்த தொற்றுக்கு பல பரிசோதனைக்கு பிறகு இரண்டு தவணையாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் முதன்முறையாக மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதாவது, பயோடெக்கின் கோவிட்-19 மறுசீரமைப்பு நாசி தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு மட்டுமே இந்த மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும் எனவும் மத்திய சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

சமையல் போட்டியில் வெற்றி பெறும் பாக்கியா? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம்!

மேலும், அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக இந்த புதிய முயற்சியை சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது. மேலும், மூக்கு வழியாக செலுத்தப்படும் இந்த கொரோனா தடுப்பூசி நுரையீரலில் உள்ள சுவாச சளியில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என WHO அவசரநிலை இயக்குனர் மைக் ரியான் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக கொரோனா தொற்றின் மூலமாக ஏற்படும் இறப்புகள் குறையும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!