இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் 3வது அலைக்கு வாய்ப்பு? WHO விளக்கம்!

0
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் 3வது அலைக்கு வாய்ப்பு? WHO விளக்கம்!
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் 3வது அலைக்கு வாய்ப்பு? WHO விளக்கம்!
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் 3வது அலைக்கு வாய்ப்பு? WHO விளக்கம்!

உலகின் பல நாடுகளில் பரவி வரும் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்றால் இந்தியாவில் 3வது அலைக்கு வாய்ப்பு உள்ளதா என்று மக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. தற்போது மக்களின் குழப்பத்தை தீர்க்கும் வகையில் WHO விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா 3வது அலை:

உலகின் பல்வேறு நாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலுக்கி வரும் கொரோனா தொற்று முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் உருவானது. இந்த கொரோனா பெருந்தொற்றால் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டன. பின்னர் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை அனைத்து நாடுகளும் தீவிரப்படுத்தின. இருந்தபோதிலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வகைகளாக ஆல்பா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட தொற்றுகள் பரவத் தொடங்கின.

கொரோனா தடுப்பூசிகளுக்கு காலாவதி காலம் – மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயம்!

தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வகையாக ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று இதுவரை 34 நாடுகளுக்கு பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் 2 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஓமைக்ரான் தொற்று இந்தியாவில் 3வது அலையை ஏற்படுத்துமா என்று மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து WHO கூறுகையில், 3வது அலையை உருவாக்கும் அனைத்து அம்சங்களையும் இந்த ஓமைக்ரான் தொற்று கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஓமைக்ரான் தொற்றின் வீரியம் மற்றும் பரவும் தன்மை அறிய 2 வாரங்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜனவரி முதல் ஏடிஎம்களில் கூடுதல் கட்டணம் வசூல் – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

அதனை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அனைவரும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இதனை எளிமையாக எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. ஏனெனில் தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசியில் நேய் எதிர்ப்பு சக்தி பெருமளவில் உள்ளது என்று அறிவுறுத்தியுள்ளது. அதனால் முடிந்த வரை அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here