கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – WHO அங்கீகாரம்!

0
கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - WHO அங்கீகாரம்!
கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - WHO அங்கீகாரம்!
கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – WHO அங்கீகாரம்!

இந்தியாவில் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது குறித்து அக்டோபர் மாதம் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கோவாக்ஸின் தடுப்பூசி :

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் உடலில் கொரோனா தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. மேலும் தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தற்போது இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின் போன்ற தடுப்பூசிகள் 18 வயது மேற்பட்டோர்க்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு PhD கட்டாயமில்லை – முக்கிய அறிவுறுத்தல்!

இதில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கவில்லை. கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தியவர்களின் பயணத்திற்கு பல்வேறு நாடுகள் அனுமதி அளிக்காததால், உலக சுகாதார அமைப்பு ஒத்துழைப்பு முக்கியமான ஒன்றாக உள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கத் தேவையான ஆவணங்களை உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது.

அக்.3ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை – 7 மாணவிகளுக்கு கொரோனா தொற்று!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாடு அனுமதி பெற பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தி வருகிறது கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பத்தை பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஏப்ரல் 19ம் தேதி சமர்ப்பித்திருந்தது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது குறித்து அக்டோபர் மாதத்தில் முடிவு எடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!