Post Office இல் எந்தெந்த சேமிப்பு திட்டங்களில் சேமித்தால் இரட்டிப்பாக மாறும்? முழு விபரங்கள் இதோ!

0
Post Office இல் எந்தெந்த சேமிப்பு திட்டங்களில் சேமித்தால் இரட்டிப்பாக மாறும்? முழு விபரங்கள் இதோ!
Post Office இல் எந்தெந்த சேமிப்பு திட்டங்களில் சேமித்தால் இரட்டிப்பாக மாறும்? முழு விபரங்கள் இதோ!
Post Office இல் எந்தெந்த சேமிப்பு திட்டங்களில் சேமித்தால் இரட்டிப்பாக மாறும்? முழு விபரங்கள் இதோ!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களில் சேமிப்பதன் மூலமாக 2 மடங்கு லாபத்தை பெற முடிகிறது. தற்போது அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் எந்தெந்த சேமிப்பு திட்டங்களில் சேமித்தால் இரட்டிப்பாக மாறும் என்று விரிவாக பார்ப்போம்.

சேமிப்பு திட்டங்கள்

இந்திய அஞ்சல் துறையில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பலன் தரக்கூடிய வகையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் தற்போது பெரும்பாலானவர்கள் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் இரட்டிப்பு பலன்களை பெற முடிகிறது. மேலும் அஞ்சல் துறை மத்திய அரசின் கீழ் செயல்படுவதால் பணத்திற்கு முழு பாதுகாப்பும் கிடைக்கிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் நம்பிக்கையுடன் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

தற்போது அஞ்சலகத்தில் எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக மாறும் என்று விரிவாக பார்ப்போம். இதில் முதலாவதாக சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற திட்டத்தை பற்றி பார்ப்போம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் ஆண்டுக்கு 7.6% வட்டி விகிதம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் 9.47 ஆண்டுகளில் உங்களின் முதலீட்டு பணம் இரட்டிப்பாக மாறிவிடும். இதையடுத்து மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.4% வட்டி விகிதம் கிடைப்பதுடன் 9.73 ஆண்டுகளில் இரட்டிப்பாக கிடைக்கும்.

NISG நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!

இதனை தொடர்ந்து PPF திட்டத்தில் 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அத்துடன் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேமித்தால் சேமிப்பு பணம் 10.14 ஆண்டுகளில் இரட்டிப்பாக பெற முடிகிறது. அடுத்ததாக மாத வருமானத் திட்டத்தில் 6.6% வட்டி விகிதத்துடன் 10.91 ஆண்டுகளில் இரட்டிப்பாக கிடைக்கிறது. தேசிய சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால் 10.59 ஆண்டுகளில் இரட்டிப்பாக பெற முடிகிறது. டைம் டெபாசிட் திட்டத்தில் 13 ஆண்டுகளில் இரட்டிப்பு லாபத்தை பெற முடியும். இதையடுத்து ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் சேமித்த பணம் 12.41 ஆண்டுகளில் இரட்டிப்பாகிவிடும். அடுத்ததாக சேமிப்பு வங்கி கணக்கு திட்டத்தில் 4% வட்டி விகிதம் வழங்கப்படுவதுடன் 18 ஆண்டுகளில் சேமிப்பு பணத்தை இரட்டிப்பாக சேமிக்க முடிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here