எந்தெந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!

0
எந்தெந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
எந்தெந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
எந்தெந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!

ஒருவரிடம் இருந்து பணம் வாங்கும் போது அந்த நோட்டுகள் செல்லுமா என்பதை பார்க்க மறந்துவிடுகிறோம். தற்போது ரிசர்வ் வங்கி எந்தெந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதற்குரிய முழு விளக்கத்தையும் கொடுத்துள்ளது.

ரூபாய் நோட்டுகள்:

நாம் உபயோகிக்கும் ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தால் செல்லாது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். ஆனாலும், ஒரு ரூபாய் தாள் கிழிந்திருந்தால் அதை எப்படியாவது கடையில் கொடுத்து மாற்றிவிட வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் ஒரு சில இடங்களில் கிழிந்த நோட்டுகளையும் வாங்கி கொள்கின்றனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி எந்தெந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதற்குரிய விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது, ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு மிகவும் அழுக்காக இருந்தால் அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், ரூபாய் நோட்டுகள் மிகவும் சேதமடைந்து ஆங்காங்கு கிழிந்திருந்தால் அந்த ரூபாய் நோட்டுகளும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனையடுத்து, ரூபாய் நோட்டுக்களின் முனையில் 1 சதுர செமீக்கும் அதிகமாக மடங்கி சேதமடைந்து இருந்தாலும் அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது. மேலும், ரூபாய் நோட்டுகளில் 8 சதுர மில்லிமீட்டருக்கு மேல் எங்கு துளைகள் இருந்தாலும் அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூபாய் நோட்டுகளின் விளிம்புகள் கிழிந்து இருந்தாலும் அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது மற்றும் ரூபாய் நோட்டுகளில் கண்டவாறு எழுதி கிறுக்கி வைத்திருந்தாலும் அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – ‘இவர்கள்’ பொருட்களை வாங்க முடியாது!

இதனையடுத்து, ரூபாய் நோட்டின் நிறம் மங்கி வேறொரு நிறத்தில் இருந்தாலோ, ரூபாய் நோட்டில் ஏதேனும் மை தெளிக்கப்பட்டிருந்தாலோ அல்லது ரூபாய் நோட்டு கிழிந்ததை பசை, டேப் கொண்டு ஒட்டியிருந்தாலும் அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், அசல் ரூபாய் நோட்டுகளின் அளவுக்கு குறைவாக மிகவும் கசங்கியிருக்கும் ரூபாய் நோட்டுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here