TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? எதிர்பார்ப்பில் தேர்வர்கள்!

0
TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? எதிர்பார்ப்பில் தேர்வர்கள்!
TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? எதிர்பார்ப்பில் தேர்வர்கள்!
TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? எதிர்பார்ப்பில் தேர்வர்கள்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலி பதவிகளுக்கான Group 2 & 2A முதல்நிலை தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ஏராளமான தேர்வர்களிடம் எழுந்து உள்ளது.

Group 2 & 2A தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளில் உள்ள 5 ஆயிரத்து 529 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி, இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். மேலும் குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வை 11 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியதாகவும், 1.83 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான நெறிமுறைகள் – CEO அறிவிப்பு!

இந்த நிலையில் குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதிய அனைவரும் தேர்வு முடிவு எப்போது வரும் என எதிர்பார்ப்பில் உள்ளனர். முன்னதாக, வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறை குறித்த உத்தேச கால அட்டவணையில், ஜூன் மாதத்தில் முதல் நிலை எழுத்துத் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும், முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் குரூப் 2 மற்றும் 2A முதல்நிலை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையே குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் ஜூலை 24ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கு பிறகு குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், முதல்நிலைத் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் வருத்தமடைய தொடங்கியுள்ளனர். மேலும் முதல்நிலைத் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு பதவிக்கும் 10 மடங்கு விண்ணப்பத்தாரர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். மேலும் இன்னும் சில நாட்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று TNPSC வட்டாரங்கள் கூறுகின்றன.

Exams Daily Mobile App Download

கட் ஆப் மதிப்பெண்கள்:

  • ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர், அனைத்து வகுப்பைகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினர் முதல்நிலைத் தேர்வில் 130 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்திருந்தால் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
  • மேலும் 140க்கும் மேற்பட்ட சரியான கேள்விகள் எடுத்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் நல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
  • ஏனைய பிரிவினர் 147 முதல் 150 வரை சரியான கேள்விகளுக்கு பதிலளித்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!