ரயில்களில் இனி மூத்த குடிமக்களுக்கான சலுகை எப்போது? IRCTC தகவல்!

3
ரயில்களில் இனி மூத்த குடிமக்களுக்கான சலுகை எப்போது? IRCTC தகவல்!
ரயில்களில் இனி மூத்த குடிமக்களுக்கான சலுகை எப்போது? IRCTC தகவல்!
ரயில்களில் இனி மூத்த குடிமக்களுக்கான சலுகை எப்போது? IRCTC தகவல்!

ரயில்வே மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை பல ஆண்டுகளாக வழங்கி வந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் அந்த சலுகை முழுமையாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ரயில்வே துறைக்கு தேசிய போக்குவரத்திற்கான சமூக கடமை இருப்பதால் ரயில்வே அமைச்சகம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

IRCTC தகவல்

2019 ஆண்டின் இறுதியில் சீனாவில் கொரோனா பரவ துவங்கியது. 2020 துவக்கத்தில் இந்தியாவுக்குள் வைரஸ் நுழைந்தது. அதேபோல் பிற நாடுகளுக்குள் வைரஸ் பரவியது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. அதனால் பொதுமக்கள் ரயில் சேவை இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன. இதனால் அனைத்து வித சேவைகளும், பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் மூத்த குடிமக்களுக்கு ரயிலில் பயணம் செய்ய பல ஆண்டுகளாக சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்த சலுகையும் நிறுத்தப்பட்டது.

Post Office இல் சேமிப்பு கணக்கு தொடங்குவோருக்கு ரூ. 35 லட்சம் வரை வருமானம் – அருமையான வாய்ப்பு!

இதனால் மூத்த குடிமக்கள் பயணம் செய்வதில் பெரும் சிரமம் மேற்கொண்டார்கள். இதனால் இந்த சலுகையை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. மேலும் இந்த கோரிக்கையின் பேரில் தற்போது மீண்டும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு சலுகை வழங்க இந்தியன் ரயில்வே முடிவு செய்திருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியாகி வரும் தகவலின்படி, மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு வகை பயணிகளுக்கு ரயில் கட்டணத்தில் சில சலுகைகளை மீண்டும் வழங்குவது குறித்து ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

மேலும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மூத்த குடிமக்கள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் சராசரியாக 50 சதவீதத்திற்கும் அதிகமான பயணச் செலவை தேசிய போக்குவரத்து நிறுவனம் ஏற்கிறது என்று கூறினார். இந்நிலையில் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு மீண்டும் ரயில்வே கட்டணத்தில் சலுகை குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்ற தகவலை தொடர்ந்து மூத்த குடிமக்கள் தற்போது மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்தத் திட்டம் மீண்டும் தொடங்கினால் அவர்களிடம் இருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. இது மூத்த குடிமக்களாக வழங்கும் சலுகை அல்ல, இஃது மூத்த குடிமக்கள் அவர்களது இளமையில் நாட்டுக்கு வியர்வை சிந்தி உழைத்தற்கு வழங்கும் மரியாதை இதை அவர்களுக்கு வழங்குவது அரசின் கடமை

  2. Never expect restoration of concessions for senior citizens till election comes. The government may please consider the cases of physically challenged and cancer patients atleast now

  3. Great news for senior citizens who are without any monetary income. I welcome the decision of the Ministry of the Railways.
    Thanks a lot

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!