NEET UG தேர்விற்கான விடைக்குறிப்பு எப்போது வெளியீடு? முக்கிய அறிவிப்பு!

0
NEET UG தேர்விற்கான விடைக்குறிப்பு எப்போது வெளியீடு? முக்கிய அறிவிப்பு!
NEET UG தேர்விற்கான விடைக்குறிப்பு எப்போது வெளியீடு? முக்கிய அறிவிப்பு!
NEET UG தேர்விற்கான விடைக்குறிப்பு எப்போது வெளியீடு? முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், NEET UG தேர்விற்கான விடைக்குறிப்பு வெளியிடுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

NEET UG தேர்வு:

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் இளங்கலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. கிட்டத்தட்ட 543 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

கிட்டத்தட்ட 18 லட்சம் பேர் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை எழுதினர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு நீட் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், பெரும்பான்மையான கேள்விகள் என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தை மையமாக கொண்டு தான் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், நீட் தேர்வில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டதால் தகுதி மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆக. 6ல் மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு

மேலும், நீட் தேர்விற்கான முடிவுகள் இந்த மாதத்தின் இறுதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நீட் தேர்விற்கான விடை குறிப்பையும் எதிர்பார்த்து தேர்வாளர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், இந்த வாரத்திற்குள் கண்டிப்பாக நீட் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான விடைக்குறிப்பு வெளியாகிவிடும் என கூறப்படுகிறது. மேலும், NEET தேர்விற்கான விடைக்குறிப்பு neet.nta.nic.in என்கிற அதிகாரபூர்வமான இணையதள முகவரியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!