தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? முதல்வர் விளக்கம்!

0
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? முதல்வர் விளக்கம்!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? முதல்வர் விளக்கம்!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? முதல்வர் விளக்கம்!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்று கேள்வி எழுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை திட்டம்:

தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போது முதல்வர் பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தார். அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ரேஷன் கடைகள் மூலம் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி முதல்வர் முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தபடி இலவச பேருந்து பயண திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றினார். ஆனால், இதுவரை குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

இந்த திட்டத்தை எப்போது செயல்படுத்துவீர்கள் என்று பொது மக்கள் அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை திட்டத்தை நடைமுறைபடுத்தாதது குறித்து அரசியல் கட்சிகள் அரசை விமர்சித்தது. அதாவது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று குற்ற சாட்டுகளை முன் வைத்தனர். மறு புறம் திமுக அரசு மாதம் ரூ 1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்ததில் இருந்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் குறித்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாநிலத்தின் நிதி நிலைமையை சரி செய்து கொண்டு இருக்கிறோம், நிதிநிலை சரியான பிறகு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டு விட்டது. எஞ்சிய 30 சதவீதம் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!