இந்தியாவில் 5G சேவை தொடங்குவது எப்போது? மத்திய மந்திரி விளக்கம்!

0
இந்தியாவில் 5G சேவை தொடங்குவது எப்போது? மத்திய மந்திரி விளக்கம்!
இந்தியாவில் 5G சேவை தொடங்குவது எப்போது? மத்திய மந்திரி விளக்கம்!
இந்தியாவில்  5G சேவை தொடங்குவது எப்போது? மத்திய மந்திரி விளக்கம்!

இந்தியாவில்  விரைவில் 5G சேவை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த சேவை எப்போது தொடங்கப்படும் என்று மத்திய மந்திரி விளக்கம் அளித்துள்ளார். இந்த சேவைக்கு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5G சேவை:

இந்தியாவில் தகவல் தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதாவது தரை முதல் விண்வெளி வரை அனைத்தும் மின்னணு தொழில் நுட்பத்தில் இயங்கி வருகிறது. நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் தொலைபேசி பயன்பாட்டை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இதனை மேம்படுத்தும் விதமாக தொலைபேசிகள் மூலமாக அத்தியாவசிய தேவைகளை செய்து முடிக்க கூடிய அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து கொண்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 4G சேவைகள் வழக்கத்தில் உள்ள நிலையில் இதனை மேம்படுத்தும் விதமாக 5G சேவைகள் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

PM கிசான் திட்டத்தின் 12 வது தவணையை பெற வேண்டுமா?அப்போ ‘இத’ முதல்ல செய்ங்க!

மேலும் இந்த  5G சேவையானது 4G சேவைகளை விட அதிவேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகள் உலகளவில் பல நாடுகளில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும்  செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், அந்த ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன. கடந்த ஜூலை 26ம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கி 7 நாட்களில்  40 சுற்றுகளாக ஏலம் நடைபெற்றது. இதில் மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5G  ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

மேலும் இந்த 5G  ஸ்பெக்ட்ரம் ஏலத்தை எடுத்த நெட்வொர்க்குகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒப்புதல் மற்றும் ஒதுக்கீடு பணி நடந்து வருகிறது. இவற்றில் முதல்கட்டமாக 13 நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 5G  ஸ்பெக்ட்ரம் தொடர்பாக மத்திய மாதிரி அஷ்வினி வைஷ்ணவ் முக்கிய விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். அதாவது 5G  சேவைகளை தொடங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மேலும் அக்டோபர் 12ம் தேதிக்குள் அறிமுகப்படுத்தபடும் என்று தெரிவித்தார். இதனை அடுத்து மற்ற நகரங்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!