இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கும்? Airtel நிறுவனம் அறிவிப்பு!

0
இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கும்? Airtel நிறுவனம் அறிவிப்பு!
இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கும்? Airtel நிறுவனம் அறிவிப்பு!
இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கும்? Airtel நிறுவனம் அறிவிப்பு!

இந்தியாவில் இந்த மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க இருப்பதாக ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த 5ஜி சேவை 4ஜி சேவையை விட மிக வேகமான இணைய சேவையை வழங்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

5ஜி சேவை:

இந்தியா, தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக வேகமான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. அதாவது அனைத்து சேவைகளும் டிஜிட்டல் முறையில் மாறிக்கொண்டே வருகிறது. தற்போது தொலைபேசியிலும் பல புதிய தொழிநுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இது வரை மக்கள் அனைவரும் 4ஜி சேவையை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கும் வேளையில் அனைத்து வேலைகளையும் விரைவாக செய்து விட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Exams Daily Mobile App Download

அதற்கேற்றவாறு தற்போது 5 ஜி சேவை தொலைபேசியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக அனைத்து வகையான வேலைகளையும் மிக வேகமாக செய்து விட முடியும். மேலும் 5ஜி தொழில்நுட்பத்தை வாகனத்தில் பொருத்தும் போது ஒரு குறிப்பிட்ட சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று தகவல்களை எளிதாக பரிமாறி கொள்ள முடியும். இதன் மூலம் விபத்துக்களையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும்.இத்தகைய நன்மைகளை கொண்ட 5ஜி தொழில்நுட்ப சேவையை அறிமுகப்படுத்த பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் – என்.வி.ரமணா பரிந்துரை

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிவடைந்தவுடன் சேவைகளை தொடங்குவதற்காக எரிக்சன், நோக்கியா, சாம்சங் போன்ற நிறுவனங்களுடன் 5ஜி நெட்வொர்க் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றது. மேலும் இந்த மாதத்திலேயே சேவைகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஏர்டெல் நிறுவனம் 5ஜி இணைப்பின் முழு பலன்களையும் நுகர்வோருக்கு வழங்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்று அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here