TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள் வெளியீடு!

0
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள் வெளியீடு!
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள் வெளியீடு!
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள் வெளியீடு!

தமிழகத்தில் குரூப் 2 தேர்வு கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுக்காக தேர்வாளர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், குரூப் 2 தேர்விற்கான கட் ஆஃப் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வு:

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் திட்டமிட்டபடி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வு கடந்த மே 21 ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. சுமார் 5529 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வை 11 லட்சம் பேர் எழுதினர். இதனையடுத்து, குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவை அறிந்துகொள்ள தேர்வாளர்கள் தயாராக இருக்கின்றனர். ஏற்கனவே, குரூப் 2 தேர்விற்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஜூலை மாதமே முடிவடைய இருப்பதால் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வாளர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும், குரூப் 2 தேர்விற்கான மெயின் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும், இதற்கான கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு (tnpsc group 2 notification) டிசம்பர் 2022 முதல் ஜனவரி 2023 மாதத்திற்குள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு பிறகு TNPSC தேர்வாணையம் குரூப் 2 குறித்தான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனாலும், இந்த மாதத்தின் இறுதிக்குள் கண்டிப்பாக குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை வாய்ப்பு – ரூ.2,60,000/- ஊதியம்!

இதற்கிடையே குரூப் 2 தேர்விற்கான கட் ஆஃப் மதிப்பெண்ணும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, பொதுப்பிரிவின வகுப்பை சேர்ந்த ஆண்கள் 158-163 வரையிலும் கட் ஆஃப் பெற்றிருக்க வேண்டும் எனவும், பெண்கள் 155-160 வரையிலும், BC வகுப்பை சேர்ந்த ஆண்கள் ஆண்கள் 158-163 வரையிலும், பெண்கள் 155-160 வரையிலும், MBC வகுப்பை சேர்ந்த ஆண்கள் 151-156 வரையிலும், பெண்கள் 145-150 வரையிலும், BC (M) வகுப்பை சேர்ந்த ஆண்கள் 147-152 வரையிலும், பெண்கள் 140-145 வரையிலும், SC வகுப்பை சேர்ந்த ஆண்கள் 145-150 வரையிலும், பெண்கள் 147-152 வரையிலும், SC (A) வகுப்பை சேர்ந்த ஆண்கள் 145-150 வரையிலும், பெண்கள் 138-143 வரையிலும், ST வகுப்பை சேர்ந்த ஆண்கள் 145-150 வரையிலும், பெண்கள் 138-143 வரையிலும் கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!