TNPSC குரூப் 2,2ஏ தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? தாமதத்திற்கு இது தான் காரணம்!!

0
TNPSC குரூப் 2,2ஏ தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? தாமதத்திற்கு இது தான் காரணம்!!
TNPSC குரூப் 2,2ஏ தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? தாமதத்திற்கு இது தான் காரணம்!!
TNPSC குரூப் 2,2ஏ தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? தாமதத்திற்கு இது தான் காரணம்!!

தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வானது நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதற்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தேர்வாணையமானது தாமதப்படுத்தி கொண்டே இருக்கிறது.

தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக அனைத்து போட்டித்தேர்வுகளும் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வாணையம் தனது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. இதில் அறிவித்தபடி குரூப் 2,2ஏ தேர்வானது கடந்த மே 21ம் தேதி அன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் குரூப் 2,2ஏ தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூலை மாதமே வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இதுவரை இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளது. TNPSC தேர்வுகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது தான் தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டபிரிவின் படி 30% இடங்கள் பெண்களுக்கு தனியாகவும் மீதமிருக்கும் 70 இடங்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டது.

TN TET Venue தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

Exams Daily Mobile App Download

இதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக உயர் நீதிமன்றம் கடந்த மாதத்தில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, இட ஒதுக்கீட்டில் முதலில் பொதுப்பிரிவையும், பிறகு சமூக ரீதியிலான இடஒதுக்கீட்டிற்கான பிரிவையும் நிரப்பி விட்டு அதன்பின்பு பெண்களுக்கான இடங்கள் பூர்த்தியாகவில்லை எனில் நிரப்பப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி இந்த நடைமுறைகளை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் தான் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது குரூப் 2,2ஏ தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!