தீவிரமடையும் குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி எப்போது? வெளியான அப்டேட்!

0
தீவிரமடையும் குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி எப்போது? வெளியான அப்டேட்!
தீவிரமடையும் குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி எப்போது? வெளியான அப்டேட்!
தீவிரமடையும் குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி எப்போது? வெளியான அப்டேட்!

இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்நோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் சின்னம்மை தடுப்பூசியை டேனிஷ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து கொள் முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறோம் என சீரம் இன்ஸ்டிடீயூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அடல் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை நோய்

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை பெரும் பாதிப்புக்கு தள்ளிய கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று இன்னும் ஓய்ந்தபாடில்லை.கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் அச்சுறுத்த தொடங்கி உள்ளது. தற்போது வரை உலகம் முழுவதும் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் பரவி உள்ளதால் உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை பரவலை ‘உலகளாவிய சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த இந்த குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் நுழைந்துள்ளது.

Exams Daily Mobile App Download

முதலில் கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து கேரளாவில் 2 பேர், டெல்லியில் ஒருவருக்கும் என்று குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து மத்திய அரசு குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மேலும் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் அசதி, காய்ச்சல், உடல் முழுவதும் கொப்புளங்கள், தொண்டை புண், இருமல், தலைவலி, உடல் சோர்வு, கண் வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சு திணறல் உள்ளிட்டவை அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

EPFO வாடிக்கையாளர்களுக்கு வரவிருக்கும் வட்டி பணம் – வெளியான மகிழ்ச்சி தகவல்!

இந்த நிலையில், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர், அடல் பூனவல்லா குரங்கு அம்மை நோய்க்கும் பயன்படுத்தப்படும் தடுப்பூசியான சின்னம்மை தடுப்பூசியை டேனிஷ் நிறுவனத்திடம் இருந்து சொந்த செலவில் கொள் முதல் செய்ய தொடங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு நான்கு பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர், இந்தியாவில் குரங்கு அம்மை பரவல் வேகம் அதிகரித்து பாதிப்பு ஏற்பட்டால், தடுப்பூசியை இறக்குமதி செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நோயின் பரவல் அதிகரிக்கும் முன்பே தடுப்பூசி கையிருப்பில் இருந்தால் இந்தியாவில் நோய் பரவலை தடுக்கலாம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here