தமிழகத்தில் 12ம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய தகவல்!
தமிழகத்தில் 12ம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய தகவல்!
தமிழகத்தில் 12ம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய தகவல்!

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு நடைபெற்றது. தற்போது இத்தேர்வுக்கான முடிவுகளை அரசு தேர்வுத்துறை இயக்ககம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான மேலும் கூடுதலான தகவல்களை பார்ப்போம்.

தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி கடந்த மே மாதம் நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8,06,277 மாணவர்கள் எழுதினார்கள். ஆனால் இத்தேர்வில் 7,55,998 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அதே ஆண்டில் உயர்க்கல்வியில் சேருவதற்கு உதவும் வகையில் அதே ஆண்டு துணைத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 12ம் வகுப்பு துணைத் தேர்வு நடைபெற்றது. இதையடுத்து தேர்வு முடிவுக்காக மாணவர்கள் காத்திருந்தனர்.

அதன்படி நாளை பிற்பகல் 2.00 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான தேர்வு முடிவுகளை நாளை பிற்பகல் 2 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் தேர்வு முடிவுகளின் பட்டியல் வெளியிடப்படும். இதனை தேர்வர்கள் தங்களின் தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையினர் ‘இதனை’ செய்தால் சஸ்பெண்ட் – கூடுதல் ஆணையர் அதிரடி உத்தரவு!

Exams Daily Mobile App Download

இந்த தேர்வு முடிவுகள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் தேர்வர்கள்  www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களின் தேர்வு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரத்தை பதிவிட வேண்டும். மேலும் விடைத்தாள்‌ நகல்‌ மற்றும்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டுமெனில் தேர்வர்கள்‌ சம்பந்தப்‌பட்ட மாவட்ட அரசுத்‌தேர்வுகள்‌ உதவி இயக்‌குநர்‌ அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதனை வருகிற 24, 25ம்‌ தேதி ஆகிய இரண்டு தேதிகளில் காலை 10 மணி முதல்‌ மாலை 3 மணி வரை நேரில்‌ சென்று குறிப்பிட்ட கட்டணம்‌ செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!