தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட் புக் எப்போது? பெற்றோர்கள் கோரிக்கை!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட் புக் எப்போது? பெற்றோர்கள் கோரிக்கை!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட் புக் எப்போது? பெற்றோர்கள் கோரிக்கை!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட் புக் எப்போது? பெற்றோர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் பள்ளிகள் திறந்து கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் ஆகியும் தற்போது வரைக்கும் மாணவர்களுக்கு இலவச நோட் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால், விரைவில் நோட் புத்தகங்களை வழங்கும்படி பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இலவச நோட்டு புத்தகம்:

தமிழக அரசு சார்பாக அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச நோட்டு புத்தகங்கள், இலவச சீருடைகள், காலணிகள், சைக்கிள்கள் முதலான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இந்த இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் மே மாதம் மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் போதே புத்தகம், நோட்டுப்புத்தகம், சீருடை, ஜாமெட்ரி பாக்ஸ் முதலான பொருட்கள் வழங்கப்பட்டு விடும்.

Exams Daily Mobile App Download

இல்லையென்றால் பள்ளிகள் திறக்கும் போது மாணவர்களுக்கு இலவச நோட் புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறந்து ஒரு மாதமாக போகின்ற நிலையிலும் கூட தற்போது வரைக்கும் இலவச நோட்டு புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது வரைக்குமே எப்போது இலவச நோட் புத்தகங்கள் வழங்கப்படும் என்பது குறித்தான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிடவில்லை.

சிலிண்டருக்கான மானியத்தொகை உங்களுக்கு கிடைத்துவிட்டதா? சரிபார்ப்பது எப்படி!

இதனால், மாணவர்கள் தங்களது சொந்த செலவிலேயே நோட் புத்தகங்களை வாங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், சில பள்ளிகளில் அந்தந்த வகுப்பு ஆசிரியர்களே மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வாங்கிக் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு உடனடியாக இலவச நோட் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கும் படி பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here