தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை எப்போது? மக்களின் கருத்து!

0
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை எப்போது? மக்களின் கருத்து!
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை எப்போது? மக்களின் கருத்து!
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை எப்போது? மக்களின் கருத்து!

தமிழக பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் இணையவழி சூதாட்டத்துக்கு தடை விதிப்பது குறித்தும், ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் தங்களது கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை:

கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு என்ற முறை அமலுக்கு வந்தது ஒரு விதம் நல்ல பயனை அளித்திருந்தாலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இணையதளத்திற்கு அடிமையாக்கியும் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் அதிகளவு பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் விளையாட்டுக்கு தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தீவிரம் காட்டும் கொரோனா, நெருங்கும் பண்டிகை காலம் – மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்!

இந்நிலையில், இணையவழி சூதாட்டத்துக்கு தடை விதிப்பது குறித்தும், ஒழுங்குபடுத்துவது பற்றியும் மக்களின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள புதிய முறை ஒன்றை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது, சமீப காலங்களில்‌ ஆன்லைன்‌ சூதாட்ட விளையாட்டுகளால்‌ ஏற்பட்ட நிதி நெருக்கடியின்‌ காரணமாக சுமார்‌ 20 மரணங்கள்‌ ஏற்பட்டுள்ளன. வரைமுறையற்று ஆன்லைன்‌ விளையாட்டுகளை விளையாடுவதன்‌ மூலம்‌ கற்றல்‌ குறைபாடுகள்‌ மற்றும்‌ பல சமூக ஒழுக்க குறைபாடுகள்‌ ஏற்படுவதாக அரசின்‌ கவனத்திற்கு தெரியவந்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், பல்வேறு அரசியல்‌ கட்சிகளின்‌ தலைவர்கள்‌, உளவியல்‌ நிபுணர்கள்‌, சமூக செயற்பாட்டாளர்கள்‌ ஆகியோர்‌ஆன்லைன்‌ சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகக்‌ கூடிய தீமையைப்‌ பற்றி கவலை தெரிவித்து வருகின்றனர்‌. இத்தகைய தொடர் கோரிக்கையால் ஆன்லைன்‌ விளையாட்டுகளைத்‌ தடை செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துகளை கருத்துகளைக்‌ கேட்க அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக, பொதுமக்கள்‌, பெற்றோர்‌, ஆசிரியர்கள்‌, மாணவர்கள்‌, இளைய தலைமுறையினர்‌, உளவியலாளர்கள்‌, சமூக ஆர்வலர்கள்‌ மற்றும்‌ ஆன்லைன்‌ விளையாட்டு நிறுவனங்கள்‌ ஆகியோரும் அவரவர் கருத்துக்களை [email protected] என்ற மின்‌ அஞ்சல்‌ முகவரியில்‌ (12.08.2022)க்குள்‌ தெரிவிக்கலாம்‌.

மேலும், கருத்துகளை நேரடியாக பகிர விரும்பும்‌ நிறுவனங்கள்‌, (09.08.2022) அன்று மாலை 05.00 மணிக்குள்‌ மேற்கூறிய மின்‌ அஞ்சலுக்கு தங்களது வேண்டுகோளை அனுப்பி வைக்கலாம்‌. கருத்துக்‌ கேட்புக்‌ கூட்டம்‌ 11.08.2022 அன்று மாலை 04.00 மணி முதல்‌ நடைபெறும்‌ என்று தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும்‌ தனி நேரம்‌ ஒதுக்கீடு செய்யப்படும்‌. இந்நிறுவனங்கள்‌ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில்‌ மட்டும்‌ இக்கருத்துக்‌ கேட்புக்‌ கூட்டத்தில்‌ பங்கு பெறலாம்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!