தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய உயர்வு & நிலுவைத்தொகை எப்போது? நீடிக்கும் போராட்டம்!

0
தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய உயர்வு & நிலுவைத்தொகை எப்போது? நீடிக்கும் போராட்டம்!
தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய உயர்வு & நிலுவைத்தொகை எப்போது? நீடிக்கும் போராட்டம்!
தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய உயர்வு & நிலுவைத்தொகை எப்போது? நீடிக்கும் போராட்டம்!

தமிழகத்தில் ஓய்வூதியம் மற்றும், அதன் நிலுவைத்தொகைகளை முழுவதுமாக அரசு செலுத்த வேண்டும் என்று பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கட்டுமான தொழிலார்களும் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நீடிக்கும் போராட்டம்:

நாடு முழுவதும் உள்ள அரசு பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை மத்திய மற்றும் மாநில அரசுகளும் பரிசீலித்து வருகின்றது. இருப்பினும், உடனடியாக, ஊழியர்கள் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோன்று ஊழியர்கள் இன்னும் சில கோரிக்கைகளையும் அரசுக்கு வைத்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது கட்டுமான தொழிலாளர்கள் பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!

அதன்படி, தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஆன்லைன் பதிவு புதுப்பித்தல் கேட்டு மனுக்களை பெறுவதை எளிமையாக்கும் படி, நேரடியாக நல வாரியத்தில் புதுப்பித்தலை துவங்க வேண்டும், நிலுவையில் உள்ள கோப்புகள் உடனடியாக பரிசினை செய்து உரிய பண பலன்களை வழங்கிட வேண்டும், கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குறிப்பாக, மாத ஓய்வூதியம் 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், மேலும், நலவாரிய அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here