CUET 2022 தேர்வு எப்போது? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

0
CUET 2022 தேர்வு எப்போது? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
CUET 2022 தேர்வு எப்போது? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
CUET 2022 தேர்வு எப்போது? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

இளங்கலை படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இது குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CUET தேர்வு:

மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு இளங்கலை, ஒருங்கிணைந்த, முதுகலை, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி போன்ற படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு CUET 2022 கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை 6 கட்டங்களாக நடைபெற்றது. இதற்க்கு பிறகு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அதாவது, இளங்கலை பல்கலை தகுதித் தேர்விற்கான தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அல்லது ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே வெளியாக வாய்ப்பு உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், எப்போது வேண்டுமானாலும் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புகள் இருப்பதால் மாணவர்கள் தயாராக இருக்கவேண்டும் எனவும், இந்த தகுதி மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டுதான் இளங்கலை படிப்புக்கான சேர்க்கை நடைபெறும் என்பதால் அனைத்து பல்கலைக்கழகங்களும் இணையதளத்தில் போர்ட்டலை தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு – உயர்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

மேலும் இந்த தகுதித் தேர்விற்கான விடைக்குறிப்பு கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அந்த விடைக்குறிப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால் இன்று இரவு 11.50 மணிக்குள் தெரியப்படுத்தலாம் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தவறான விடைக்கும் ரூபாய் 200 வீதம் கட்டணமாக செலுத்தி முகமைக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல் தெரிவிக்கப்படும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் வல்லுநர்களை கொண்டு குறைகள் சரிபார்க்கப்படும் எனவும், அந்த வினாவில் ஏதேனும் குறை கண்டறியப்பட்டால் அதற்குரிய சரியான விடைகள் மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!