CUET 2022 தேர்வு எப்போது? UGC தலைவர் விளக்கம்!

0
CUET 2022 தேர்வு எப்போது? UGC தலைவர் விளக்கம்!
CUET 2022 தேர்வு எப்போது? UGC தலைவர் விளக்கம்!
CUET 2022 தேர்வு எப்போது? UGC தலைவர் விளக்கம்!

பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களுக்கான நுழைவு CUET 2022 தேர்வு சில தொழில்நுட்ப காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு எப்போது என்பது குறித்தான அறிவிப்பை UGC வெளியிட்டுள்ளது.

CUET தேர்வு:

மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு இளங்கலை, ஒருங்கிணைந்த, முதுகலை, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி போன்ற படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு CUET 2022 குறித்தான அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டிருந்தது. அதாவது, CUET 2022 தேர்வு தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் வேகமாகப் பரவும் தோல் கட்டி நோய் – 3,000 கால்நடைகள் உயிரிழப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 500 நகரங்களில் CUET 2022 தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும், CUET தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு CUET நடைபெறுவதாக இருந்தது. அதாவது, முதல் ஷிப்ட் காலையிலும், இரண்டாவது ஷிப்ட் மாலையிலும் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 17 மாநிலங்களில் உள்ள ஒரு சில தேர்வு மையங்களில் CUET தேர்வு நடைபெறவில்லை.

அதே போல மாலை ஷிப்ட் 489 மையங்களில் நடைபெற இருந்த CUET தேர்வும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, ரத்து செய்யப்பட்ட CUET 2022 தேர்வு ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரைக்கும் நடைபெறும் என CUET 2 ஆம் கட்டத் தேர்வின் நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு UGC தலைவர் M. ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான புதிய CUET அட்மிட் கார்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!