CBSE 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? விரைவில் வெளியீடு!

1
CBSE 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? விரைவில் வெளியீடு!
CBSE 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? விரைவில் வெளியீடு!
CBSE 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? விரைவில் வெளியீடு!

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) எந்த நேரமும் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

தேர்வு முடிவுகள்

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை எப்போது வேண்டுமானாலும் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.inல் அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. கடந்த கல்வியாண்டில் கொரோனா பரவலால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை இரண்டு பிரிவுகளாக நடத்துவதற்கு CBSE வாரியம் முடிவு செய்தது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் CBSE 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான டெர்ம் 1 தேர்வுகள் நடத்தப்பட்டு இந்த ஆண்டு துவக்கத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2வது டெர்ம் தேர்வுகள் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்ட நிலையில், மாணவர்கள் அனைவரும் இப்போது தேர்வு முடிவுக்காக எதிர்பார்த்து காத்துள்ளனர். ஆனால், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை CBSE கல்வி வாரியம் இதுவரைக்கும் வெளியிடவில்லை.

தமிழகத்தில் பள்ளிகளில் மீண்டும் ஷிப்ட் முறையில் வகுப்புகள்? அவசர ஆலோசனை!

என்றாலும் இந்த மாத இறுதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இது தொடர்பான அறிக்கைகளின் படி, சிபிஎஸ்இ வாரியம் விடைத்தாள்களின் மதிப்பீட்டை முடித்து இப்போது முடிவுகளை தொகுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு முடிவுகளை விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மாணவர்கள் தங்கள் இறுதி மதிப்பெண்களை cbse.gov.in, results.gov.in அல்லது digilocker.gov.in என்ற இணையதளங்கள் மூலம் சரிபார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!